Wednesday, January 30, 2013

Mugam - Manirathnam.....

மணிரத்னத்தின் இயற்பெயர் சுப்பிரமணி. அப்பா பெயர் ரத்தினம். இரண்டின் மிக்ஸிங்தான் மணிரத்னம்.
பேருந்துப் பயணம் மணிரத்னத்துக்குப் பிடித்த விஷயம். வெளி மாநிலங்களில் தொப்பியும் மஃப்ளரும் அணிந்துகொண்டு பேருந்துகளில் தான் பயணிப்பார். அவர் படங்களில் ஏதாவது ஒரு கேரக்டர் பேருந்தில் பயணிப்பதுபோன்ற காட்சி நிச்சயம் இடம்பெறும்.
ஆச்சர்யமாகக் 'கடல்’ படப்பிடிப்பில் வழக் கத்தைவிட அதிகமாகவே கோபப்படுகிறார் மணிரத்னம். அவருடைய யூனிட் ஆட்களுக்கே இது புதுசு. ஆனால், 'பேக்கப்’ சொன்ன பிறகு, உதவியாளர்கள் அருகில் வந்து தோள் தட்டி 'ரொம்பக் கோபப்பட்டுட்டேன்ல... ஸாரி!’ என்கிறார்.
குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. 'இனியும் குழந்தை வேண்டாமே!’ என நினைத்த அவர் தாயார், கோயிலைச் சுற்றி வேக வேகமாக நடப்பாராம். கரு இயற்கையாகவே கலைந்துவிட்டால் நல்லது என்பதுதான் அந்த நடைப் பயிற்சிக்குக் காரணம். ஆனாலும், ஆரோக்கியமாகவே பிறந்தார் மணி. அதனால், அவரை 'தெய்வக் குழந்தை’ என்றே நினைத்தார்கள் அவருடைய குடும்பத்தினர். சில வருடங்களுக்கு முன் இதய நோய் காரணமாக மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டபோதுகூட, 'அவருக்கு எதுவும் ஆகாது!’ என அவர்கள் ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்தார் கள்.
வீட்டிலும் நண்பர்களுடனான சந்திப்பிலும் 95 சதவிகிதம் ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஆனால், அவருடைய படங்களில் குழந்தைகள் பேசிக்கொள்வதாக இருந்தால்ஆங்கில வசனங்கள் இருக்காது. 'மம்மி, டாடி’ என்பதற்குக்கூடத் தடா.
செடிகள் மீது குழந்தைகளின் பிரியத்தைக் காட்டுவார் மணி. கண் முன் யாரேனும் செடியின் இலையைக் கிள்ளிவிட்டால்கூடப் பதறுவார். நண்பர்களுடன் ரிலாக்ஸாக மனம்விட்டுப் பேச மணி தேர்ந்தெடுக்கும் இடத்தின் பின்னணியில் எப்போதும் செடிகள் இடம்பிடித்திருக்கும்.
'இதயத்தைத் திருடாதே’ படத்தில் இருந்து இவரிடம் 'உதவி இயக்குநர்’ அந்தஸ்தில் பணி புரிந்த யூ.வி.பாணிக்கு இப்போது வயது 80. தன் தந்தை ஸ்தானத்தில் அவரை மதிக்கும் மணி, அவருக்கு அலுவலகத்தில் தனி அறை கொடுத்திருக்கிறார்.
இவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா... இல்லையா என்று முடிந்தால் கண்டுபிடித்துப் பாருங்களேன்.
சினிமாவில் சென்டிமென்ட் உடைப்பதென்றால் அவ்வளவு உற்சாகம். படத்துக்கு 'அக்னி நட்சத் திரம்’ எனப் பெயரிட்டபோது, 'படம் ஓடாது...அந்தப் பெயரை மாற்றுங்கள்’ என்று பல தரப்புகளில் இருந்தும் அறிவுரை. இறுதி வரை தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
பெரும்பாலும் தமிழ்ப் படங்கள் பார்க்கவே மாட்டார். பார்த்த படங்களில் மனதை மிகவும் பாதித்த படம் 'நான் கடவுள்’. ''நல்லா இருக்குல்ல!'' என்று சொன்னார். சமீபத்தில் 'எங்கேயும் எப்போதும்’, 'வழக்கு எண் 18/9’ படங்களைப் பார்த்திருக்கிறார்.
தமிழகத்தில் ஃபேஸ்புக் பிரபலமாவதற்கு முன் அதில் அதிதீவிரமாக இயங்கிவந்தவர். இப்போது அவருடைய நண்பர்களுக்கு மட்டும் தெரிந்த ஐ.டி-யில் இருக்கிறார். அதிலும் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை.
இப்போது பிடித்த ஹீரோ தனுஷ். 'ரியலிஸ்டிக் ஆக்டர்’ என்பார்.
எப்போதும் பிடித்த ஹீரோ - ஹீரோயின்: அரவிந்த்சாமி - ரேவதி.
நெருங்கிய நண்பர்கள்: பி.சி.ஸ்ரீராம் (வாடா, போடா நெருக்கம்!) ஜெயேந்திரா, சங்கர்சுந்தரம்.
படத்தின் வசனங்களைப் போலத்தான் அவருடைய பேச்சும் இருக்கும். எல்லாவற்றுக்கும் புன்னகைதான். கோபமாக இருந்தால் 'மடப் பயலே’, 'புத்திசாலித்தனமாப் பேசாதே’ என்பார். அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை... 'ஃபாஸ்ட்... ஃபாஸ்ட்!

Tuesday, January 29, 2013

J Jayalalthia - AIADMK Chief

மிழகத்தின் இரும்பு மனுஷி! எதிர்பாராத உயரங்களும் திடீர்த் திருப்பங்களும் ஜெய லலிதாவின் வாழ்வில் சகஜம். இரும்புத் 'தோட் டத்துக்குள்’ வளைய வரும் ஜெயலலிதாவின் பெர்சனல் இங்கே கொஞ்சம்...
1964-ம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வில் 'சிறப்புத் தேர்ச்சி’ பெற்றவர், இப்போதைய தமிழக முதல்வர். மேற்படிப்பு தொடர மத்திய அரசிடம் இருந்து உதவித் தொகை கிடைத்தது. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல், ஜெயலலிதாவை அரவணைத்துக் கொண்டது சினிமா உலகம்.
காலை டிபனில் இடியாப்பம்தான் இஷ்டம். தேங் காய்ப் பால் - இடியாப்பம்தான் எப்போதும் பிடித்த கூட்டணி.
வீட்டின் போர்ட்டிகோ வாசலுக்கு எதிரே சுவரில் அழகிய விநாயகர் படம் ஒன்று செதுக்கப்பட்டு இருக்கும். காரில் வெளியில் கிளம்பும்போதும், திரும்பி வரும்போதும் அந்த விநாயகர் தரிசனம் தவறாது.
சிகரெட் புகை ஆகவே ஆகாது. போயஸ் கார்டன் இல்லம் கட்டப்பட்ட காலத்தில் இருந்தே அந்த வளாகத் துக்குள் சிகரெட் புகைத் தடம் இருந்தது இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தையின்போது, மிக மூத்த அரசியல்வாதிகள் இருவர் டென்ஷன் தணிக்க போர்ட்டிகோ அருகில் புகை பிடிக்கத் தொடங்கினர். அதைப் பார்த்ததும் பதறியபடியே வந்த கார்டன் ஊழியர்கள், 'அம்மாவுக்குப் பிடிக்காது. இங்கே வேண்டாம்!’ என்று தடுத்துவிட்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரைபோயஸ் கார்டன் வீட்டு எண் 36. கூட்டுத் தொகை 9. புதிய வீட்டு எண்கள் வழங்கப்பட்ட சமயம், அளிக்கப்பட்ட எண் 81. கூட்டுத் தொகை... அதே 9.
'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழில் இடம் பெற வேண்டிய முக்கியமான அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகள் ஜெயலலிதாவின் அனுமதிக்குப் பிறகே அச்சுக்குப் போகும்.
துண்டுச் சீட்டில் அனுப்பப்படும் குறிப்புகளைப் படித்த பிறகு, அது தேவை இல்லை எனில், அந்தச் சீட்டை அங்கேயே இரண்டாக, நான்காக, எட்டாக, பதினாறாகக் கிழித்துப் போட்டுவிடுவார்.
உடல் எடை குறைக்க நடைப் பயிற்சி அவசியம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஆனால், வேலைப் பளு காரணமாக போயஸ் கார்டனில் நடக்க முடிவது இல்லை. இதனால் பெரும்பாலும் அவர் கொடநாட்டுக்குச் செல்வதே நடைப் பயிற்சிக்குத்தான். பிராந்தியமே குளிரடிக்கும் கொடநாடு பங்களாவின் வெளிப்புறம் நடந்த வண்ணம் இருப்பார்.
சுயசரிதை எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், காலம் நேரம் கைகூடவில்லை.
ஜெயலலிதாவின் எழுத்தாற்றல் திறன் யாருமே அறியாதது. நடித்துக்கொண்டு இருந்தபோது நிறைய எழுதியிருக்கிறார். கல்கியில் தொடராக வெளியான 'உறவின் கைதிகள்’ நாவல் ஒரு நடிகனுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டது. கர்ப்பத்தில் கைகோக்கும் காதல் ஜோடிக்கு இறுதியில் தாங்கள் தந்தை மகள் உறவு எனத் தெரிய வருவதாக, அப்போதே துணிச்சல் திருப்பங்களுடன் நாவலைப் படைத்தார்.
'அஞ்சுவது யாதொன்றுமில்லை... அஞ்ச வருவதும் இல்லை’ அப்பர் எழுதிய இந்த வரிகள் ஜெயலலிதாவுக்கு ரொம்பப் பிடிக்கும். தைரியம் தேவைப்படும் தருணங் களில் எல்லாம் இந்த வரிகளைத்தான் உச்சரிப்பார்.
கிளாஸிக் பாடல்களின் தொகுப்பாக ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தேன் கிண்ணம்’ நிகழ்ச்சியில் ஜெயலலிதா டிக் அடித்துத் தரும் பாடல்கள்தான் ஒளிபரப்பாகும்.
ஜெயா டி.வி. செய்தி வாசிப்பாளர்களின் உச்சரிப்பை உன்னிப்பாகக் கவனிப்பார். 'சுப்பிரமணிய சாமி இல்லை... சுவாமி, ஹில்லாரி இல்லை ஹிலாரி, சோ இல்லை சோ ராமசாமி’ என சின்னச் சின்னத் திருத்தங் களையும் உடனுக்குடன் சொல்வார். அல்லது நோட் போட்டு அனுப்புவார்.
செல்போன் வைத்துக்கொள்ள மாட்டார். ஆனால், இவருடைய பிரத்யேக எண் கொண்ட செல்போன் பி.ஏ. பூங்குன்றனிடம் இருக்கும். வடக்கில் இருந்து வரும் அதிமுக்கிய அழைப்புகளுக்கு மட்டும் அதில் செவி சாய்ப்பார் ஜெயலலிதா.

Saina Naiwal....A super star...

'சூப்பர் சாய்னா’ என்றுதான் ரசிகர்கள் அழைக் கிறார்கள் சாய்னாவை. ஆம்... இந்திய விளை யாட்டு உலகின் சூப்பர் ஸ்டார் இப்போது சாய்னா தான்! வெற்றி, புகழ், விளம்பர வெளிச்சம் கிடைத்ததும் திறமை மறந்து, மக்கள் அபிமானம் இழந்துவிடும் வீரர்களிடையே சாய்னா மட்டும் விதிவிலக்கு. 'தங்கள் வீட்டுப் பெண்ணாக’ இந்திய தேசமே கொண்டாடும் சாய்னாவின் தனிமைப் பக்கங்களில் இருந்து இங்கே கொஞ்சம்...
22 வயது சாய்னா பிறந்தது, ஹரியானா மாவட்டத்தின் ஹிஸார் மாவட்டம். இடமாற்றம் காரணமாக சாய்னாவின் தந்தை ஹைதராபாத்துக்கு வர, கூடவே வந்தது குடும்பம். சாய்னாவின் அப்பா, அம்மா இருவருமே மாநில அளவிலான பேட்மிட்டன் பிளேயர்கள்.
கராத்தேதான் கற்றுவந்தார் சாய்னா. ஒரு முறை கராத்தே வகுப்பில், 'படுத்துக்கொள். உன் மீது இப்போது பைக் ஏறும்’ என்று பயிற்சியாளர் சொன்னபோது, நைஸாக எஸ்கேப் ஆனார். பிறகுதான் கவனம் பேட்மிட்டன் பக்கம் திரும்பியது.
1999-ம் ஆண்டு திருப்பதியில் நடந்த 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் வென்ற சாய்னாவுக்குப் பரிசாகக் கிடைத்தது 300.
சாய்னா படித்த பாரதிய வித்யாபவன் வித்யாஷ்ரம் பள்ளியின் ஒரு பகுதிக்கு இப்போது 'சாய்னா ப்ளாக்’ என்று பெயர்.
லண்டன் ஒலிம்பிக்குக்கான பயிற்சியில் சாய்னா மும்முரமாக இருந்த நேரம்... 'நிச்சயம் பதக்கம் வெல்வார்’ என்ற நம்பிக்கையில் பல கோடி ரூபாய்க்குத் தனியார் கோலா நிறுவனம் ஒன்று இவரை விளம்பரத் தூதர் ஆக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியது. 'ஒலிம்பிக் பயிற்சியில்தான் என் முழுக் கவனமும் இருக்கிறது. இப்போதைக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள்கூட வேண்டாம்!’ என்று ஆரம்பத்திலேயே ஃபுல்ஸ்டாப் வைத்தார் சாய்னா.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, நாடு முழுக்கப் பயணம் செய்து பாராட்டு விழாக்களில் சாய்னா பங்கெடுத்தார். இதற்காக ஒலிம்பிக்குக்குப் பின் நடந்த ஜப்பான் மற்றும் சீன ஓப்பன் போட்டிகளில்கூட அவர் பங்கேற்கவில்லை. 'விளையாடுவதை விட்டுவிட்டு, பரிசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்’ என்று எழுந்த விமர்சனங்களுக்கு சாய்னா இரண்டுவிதமாகப் பதில் சொன்னார்...
வார்த்தைகளில் சொல்லிய பதில் இது... 'பேட்மிட்டன், கிரிக்கெட் போல் இல்லை. ஒலிம்பிக் வெற்றியை இந்தியா முழுக்கக் கொண்டாடினால்தான் இந்த விளையாட்டைப் பற்றிய விழிப்பு உணர்வு உண்டாகும். இந்தியாவுக்கு இன்னும் நிறைய சாம்பியன்கள் வருவார் கள்.’
செயலில் உணர்த்திய பதில் இது... ஒலிம்பிக் போட்டிக்குப் பின்பு விளையாடிய டென்மார்க் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாய்னாதான் சாம்பியன்.
''என்னுடைய போட்டியாளர்கள் பற்றிப் பயப்பட மாட்டேன். அது சீனர்களோ, கொரியர்களோ... எப்போதும் 12-13 வயதுப் பெண்ணாக இருந்தபோது 25-26 வயது வீராங்கனைகளை எப்படித் தோற்கடித்தேன் என்று ஃப்ளாஷ்ஃபேக் ஓட்டிப் பார்த்துக்கொள்வேன்!'' என்று சக்சஸ் சீக்ரெட் சொல்கிறார்.
இந்திப் படங்களின் ரசிகை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் காதலி. பிடித்த நடிகர் அமீர் கான். ஷாப்பிங், ஐஸ்க்ரீம், ஐபேட் கேம்ஸ் மூன்றும் சாய்னாவின் இஷ்டம்.
ரொம்பவும் எமோஷனலான பெண் சாய்னா. தன் வீட்டருகே உள்ள ஏழைப் பள்ளி மாணவர்களின் படிப் புக்கு உதவி செய்துவருபவர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கர்நாடகாவின் கிரிஷாவுக்கு 2 லட்சம் அன்பளிப்பாக வழங்கினார்.
முன்னர் சாய்னாவின் பயிற்சி செலவுகளுக்காக அவரது தந்தை பல்வேறு காரணங்களைச் சொல்லி ஆறு முறை வைப்பு நிதியில் இருந்து பணம் எடுத்திருக்கிறார். இப்போது மூன்று வருடங்களுக்கு 40 கோடி விளம்பர ஒப்பந்தத்தில் இருக்கும் சாய்னா, கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி... 1.5 கோடி.
தினமும் யோகா செய்வதே சிக்கலான பல தருணங் களைச் சமாளிக்கத் தனக்குக் கை கொடுக்கிறது என்பார்.

Mugam - RajinKanth .....From Vikatan

ஜினி இப்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார்! கோடம்பாக்க சாதனைப் புத்தகத்திலும் 'மேனேஜ்மென்ட்’ பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்று இருக்கும் ரஜினியின் வாழ்க்கை எப்போதுமே ஒரு 'ஓப்பன் புக்’!
இப்போதும் குருநாதர் பாலசந்தர் தொலைபேசியில் லைனுக்கு வந்தால், எழுந்து நின்றே பேசுவார். 'பைரவி’ படம் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த கலைஞானம் வந்தால், வாசலுக்கே வந்து வரவேற்று அமரவைப்பார். தான் நின்றுகொண்டே பேசுவார். வாசல் வரை சென்று வழியனுப்புவார்.
'என்னுடன் வா... தனியாகத் தொழில் வைத்துத் தருகிறேன்!’ என்று பல முறை அழைத்தும் வராததாலேயே, ரஜினிக்கு அன்றும் இன்றும் என்றும் நெருக்கமான நண்பராக இருக்கிறார் ராஜ்பகதூர். 58-வயது வரை கண்டக்டராகப் பணிபுரிந்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றிருக்கிறார் ராஜ்பகதூர்.
'பாபா’ படம்பற்றி எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பிய சமயம், 'சூப்பர் ஸ்டார் அவ்வளவுதான்’ என்று சினிமா உலகப் புள்ளிகள் சிலர் பார்ட்டி வைத்துக் கொண்டாடியதைக் கேள்விப்பட்டு, மிகவும் சங்கடப்பட்டுப் போனார். அவர்களுள் தான் நெருக்கமான நண்பர்களாக நினைத்துப் பழகிய சிலரும் இருந்ததே, வருத்தத்துக்குக் காரணம்.
'அன்புள்ள ரஜினிகாந்த்’, 'வள்ளி’ பட இயக்குநர் கே.நட்ராஜ், அபரிமிதமான அன்பு காரணமாகத் தன் மகளுக்கு 'ரஜினி’ என்று பெயர் சூட்டியதில் மிகவும் நெகிழ்ந்துபோனார் ரஜினி. சமீபத்தில் நடிகர் விஷ்ணு - 'ரஜினி’ திருமணத்தில் கலந்துகொண்டு ரஜினி வாழ்த்தியதற்கு அந்தப் பிரியமே காரணம்.
'என் வாழ்க்கையில் வந்த பெண்களில் ஸ்ரீப்ரியாவுக்கு முக்கியமான இடம் உண்டு’ என்பார். இடைவிடாத படப் பிடிப்பு தந்த அழுத்தம் காரணமாக, ஒரு சமயம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது, அருகில் இருந்து பார்த்துக்கொண்டவர் ஸ்ரீப்ரியா.
அசைவ உணவுகளை வகை பிரித்து வேட்டையாடுவார். 'இந்தந்த ஹோட்டலில் இன்னின்ன அயிட்டங்கள் வாங்கி வா!’ என்று வரவழைத்து ருசிப்பார். ஆனால், அதெல்லாம் அப்போது. சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு, காலையில் பழங்கள், அதிகபட்சம் இரண்டு இட்லி. மதியம் கொஞ்ச மாக சாதம், இரவு எண்ணெய் இல்லாத சப்பாத்தி. அவ்ளோதான்.
நண்பர் கிட்டுவின் 'டி போர்ட்’ அம்பாஸடர் காரில்தான் அடிக்கடி ஊர் சுற்றுவார். நினைத்தால் சட்டென்று காரில் ஏறி ஊரைவிட்டுத் தள்ளிச் சென்று, எங்காவது ஒரு டீக்கடை பெஞ்ச்சில் டீ கிளாஸும் செய்தித்தாளு மாக அமர்ந்துகொள்வார். சுற்றிலும் இருப்பவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பதுதான் பிடித்த பொழுதுபோக்கு. சமீபமாக இன்னோவாவில் பயணிக்கிறார்.
'எந்திரன்’ படம் வெளியானபோது தன்னைச் சந்திக்க வந்த நண்பர்களிடம் 'எம்.ஜி.ஆரோட 'உலகம் சுற்றும் வாலிபன்’ மாதிரி 'எந்திரன்’ படம் எல்லா இடத்துலயும் ரீச் ஆகியிருக்கா? என்ன பேசிக்கிறாங்க?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார். கேள்விக்கான காரணம் புரியாமல் திகைத்து நின்றிருக்கிறார்கள் நண்பர் கள்.
'என் பெங்களூரு அண்ணன் சத்திய நாராயணா. சென்னை அண்ணன் எஸ்.பி.முத்துராமன்!’ - இயக்குநர் முத்துராமன் மீது அந்த அளவுக்குப் பாசம் காட்டுவார்.
எட்டு எட்டாக வாழ்க்கையைப் பிரித் துக்கொள்ளச் சொன்னவர், தனதுநண்பர் களை நான்கு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார். பெங்களூரு போக்கு வரத்துக் கழக நண்பர்கள், சென்னை திரைப்படக் கல்லூரி நண்பர்கள், சினிமா உலக நண்பர்கள், இமயமலை யாத்ரா நண்பர்கள்.
படங்களில் நடிக்காதபோது மிகவும் ரிலாக்ஸாக நண்பர்களிடம் அரட்டை அடித்தபடி உற்சாகமாக நேரம் செலவழிப் பார். ஆனால், தான் நடிக்கும் பட வேலைகள் ஆரம்பித்தது முதல் படம் வெளியாகி ரிசல்ட் தெரியும் வரை டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன் மட்டுமே.
ரஜினியின் செல்போன் எப்போ தும் அவருடைய உதவியாளர் சுப்பையாவிடம் இருக்கும். ரஜினி யின் எண்ணுக்கு வரும் அழைப்பு களுக்கு முதலில் காது கொடுப் பதும் சுப்பையாதான். ரஜினி பேச விரும்புபவர்களை சுப்பையா லைனில் பிடித்துக் கொடுத்த பிறகு, 'வணக்கம்... நான் ரஜினி பேசுறேன்!’ என்று கணீரென ஆரம்பிப்பார் ரஜினி.
கடவுளுக்கு இணையாக ரஜினி மனதில் போற்றுபவர் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். தன்னுடைய பூஜை அறையில் தேவர் படத்தை வைத்து வணங்கி வருகிறார்.
சென்சேஷனல் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைப்பார். நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசி, புகைப்படங்கள் எடுத்து என... அந்த நாள் முழுவதும் அவர்களுக்குத் தான் டெடிகேடட்.
தான் நடித்த படங்களில் ரஜினி யின் மனதுக்கு நெருக்கமானது 'ராகவேந்திரா’. மிகவும் பிடித்தது 'அண்ணாமலை’, 'பாட்ஷா’. அவரே ஒரு ரஜினி ரசிகனாக ரசிப்பது 'எந்திரன்’.