Tuesday, January 29, 2013

Super singer - An update.....

தமிழகத்தின் செல்லக் குரலோன்... ஆஜித். விஜய் டி.வி-யின் சூப்பர் சிங்கர் ஜூனியர். 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு, ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் ஓர் ஆண்டுக்கு இலவசப் பயிற்சி என டபுள் ஜாக்பாட் அடித்திருக்கிறான் ஆஜித்.
பரவசத்தில் திக்குமுக்காடிக்கிடந்த ஆஜித்தின் அம்மா ஷபானாவிடம் பேசினேன்.
''எல்லாமே ஒரு கனவு மாதிரிதான் இன்னும் இருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான் சார் நிகழ்ச்சிக்கு வந்தது, வாழ்த்தினது, ஹரிஹரன் சாரைச் சந்திச்சது... எதையுமே நம்ப முடியலை. பத்து வருஷங்களுக்குப் பின்னாடி நடக்க வேண்டியது எல்லாம் இப்பவே நடந்துடுச்சு. என் மகன் ஆஜித் எனக்குக் கொடுத்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியலை'' - சட்டென்று விழியோரம் எட்டிப் பார்த்த கண்ணீரைத் துடைத்தபடி தழுதழுக்கப் பேசினார் ஷபானா.
''என் அப்பா மிலிட்டரியில வேலை பார்த்தவர். அப்புறம் பிசினஸ் ஆரம்பிச்சதுல ஏக நஷ்டம். குடும்பம் நொடிச்சுப்போன சமயத்துலதான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. பத்து வருஷம் கழிச்சு உண்டான குழந்தை ஆஜித். ஆனா, என் கணவர்கிட்ட நான் சொன்னப்ப 'கலைச்சிடு’னு சொன்னார். 'முடியாது’னு சொன்னேன். அதுவே எங்க பிரிவுக்குக் காரணமாயிடுச்சு. என் கணவர் விட்டுட்டுப் போய்ட்டார். ரெண்டு மாசக் கர்ப்பிணியா இருக்கும்போது என் அம்மா வீட்டுக்கு வந்தேன். அதுக்கப்புறம் அழுகையும் துயரமுமாவே ஒ
வ்வொரு நாளும் கடந்துச்சு. ஆரம்பத்துல டெல்லியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த என் தம்பி மாசாமாசம் பணம் அனுப்புனான். ஆனா, அதுவும் நிலைக்கலை. ஒரு விபத்துல அவனைப் பறிகொடுத்துட்டோம். வெறும் பத்தாவது
வரைக்குமே படிச்சு இருந்த எனக்கும் எந்த வேலையும் கிடைக்கலை. வாழ்க்கையே சூனியமாயிட்ட மாதிரி இருந்துச்சு. அப்போ நான் சிந்துன கண்ணீர் கடவுளுக்குத்தான் தெரியும். என்ன பண்றதுன்னு ஏங்கி நின்னப்போ, அக்காவும் ரெண்டு தங்கச்சிகளும்தான் என்னைத் தாங்கிப் பிடிச்சாங்க. அந்தச் சமயங்கள்ல எல்லாம் என்னோட ஒரே நம்பிக்கையும் ஆறுதலும் ஆஜித்தான். என்னோட ஆசை, கனவு, லட்சியம், நம்பிக்கை எல்லாத்தையும் இந்தச் சின்ன வயசுலயே நிறைவேத்திட்டான் என் மகன்''- நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் வார்த்தைகள் வராமல் தவிக்கிறது தாய் மனசு!
பக்கத்தில் இருந்த ஆஜித்தின் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு தொடர்கிறார் ஷபானாவின் அக்கா ஹமீதா. ''ஆஜித், படிக்கிற ஆல்ஃபா ஸ்கூல்ல நான் டீச்சர். சின்ன வயசுல இருந்தே ஆஜித் படு சுட்டி. அவனுக்கு ஒரு வயசு இருக்கும்போது ரேடியோவுல பாட்டு கேட்டதும் அதை அப்படியே அழகா ஹம் பண்ணான். ஒன்றரை வயசுல தெள்ளத்தெளிவா அட்சரம் பிசகாமத் தமிழ் பேசினான். யு.கே.ஜி. படிக்கும்போதே 'வந்தே மாதரம்’ பாட்டை கீ போர்டுல வாசிச்சுக்கிட்டே பாடினான். 'சூப்பர் சி
ங்கர் ஜூனியர்-2’லயே அவன் கலந்துக்கிட்டான். ஆனா, ஜெயிக்க முடியலை. 'ஜூனியர் 3’-க்கு அப்
ளை பண்ணப்பகூட முதல்ல அவனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனா, ஒருகட்டத்துல ஜெயிச்சே ஆகணும்னு ஒரு உத்வேகம் அவனுக்கு வந்துடுச்சு. அந்த உத்வேகம்தான் இன்னைக்கு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வெச்சுருக்கு'' என்று சொல்லும் பெரியம் மாவையே பார்த்துக்கொண்டு இருந்த ஆஜித் மெள்ளப் பேச ஆரம்பித்தான்.
''அங்கிள், நான் யார்கிட்டயும் பாட்டு கத்துக்கல. இந்துஸ்தானி, கர்னாட்டிக் மியூஸிக் எது
வும் பழகலை. ஆனா, போட்டியில் இருந்த எல்லாரும் செம பிராக்டீஸ்ல இருந்தாங்க. முதல்ல நான் ரொம்பப் பயந்துட்டேன். பெரியம்மாதான் திரும்பத் திரும்ப 'டேய், உன்னால முடியும்... உன்னால நிச்சயமா முடியும்டானு’ சொல்லிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு பாட்டையும் பத்து தடவை விடாமக் கேட்டுக் கேட்டு பிராக்டீஸ் பண்ணேன். ரூம் கதவைச் சாத்திக்கிட்டு ரிகர்சல் பண்ணுவேன். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு அங்கிள். ரஹ்மான் சார் மாதிரி நானும் மியூஸிக் டைரக்டர் ஆகணும். அதான் அங்கிள் என் கனவு'' என்கிறான் ஆஜித்.
கனவு மெய்ப்படட்டும்

Mugam - From Vikatan

82 வயது 'வாலி’பர். ஜாலித் தமிழர். ஐஸ்க்ரீம் பேனாக்காரர். மூன்று தலைமுறைகள் தாண்டியும் முத்திரை பதிக்கும் கவிஞர் வாலியின் பெர்சனல் முகம் இங்கே...
தன்னை சென்னைக்கு அழைத்த டி.எம்.எஸ்., பாடல் எழுத வாய்ப்பு தந்த எம்.எஸ்.வி., ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு சினிமா கம்பெனிகளுக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு கேட்ட நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்... மூவரையும் நினைக்காத நாள் இல்லை.
பாடல் கம்போஸிங்கின்போது எம்.ஜி.ஆர்., சிவாஜி... யார் வந்தாலும் மரியாதை நிமித்தம் பாதி உடம்பைத் தூக்கி உட்கார்ந்துவிடுவார். ஆனால், வி.கோபாலகிருஷ்ணன் வந்தால், மடியில் உள்ள வெற்றிலைப் பெட்டி கீழே விழுவதுகூடத் தெரியாமல் சட்டென்று எழுந்து நிற்பார்.
கையில் எப்போதும் வெற்றிலைப் பெட்டி இருக்கும். வெற்றிலைப் பெட்டியும் ஆர்மோனியப் பெட்டியும் சந்தித்தால், அந்தப் படப் பெட்டியில் ஹிட் பாடல்கள் குடியிருக்கும். ஆனால், சமீப காலமாக வெற்றிலை போடுவது இல்லை.
சை ஞானஸ்தன். எந்தப் பாடலைக் கேட்டாலும் அதன் ராகத்தை மிகச் சரியாகச் சொல்வார்.
நிறைய சென்டிமென்ட் பார்ப்பார். அவரது புத்தகத்தின் தலைப்புகள் எட்டு எழுத்துக்களில் இருப்பதும் அதில் ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுத் தரும் டியூனுக்குப் பெரும்பாலும் 'ம’ வரிசையில் பல்லவி தொடங்கும். ஹிட் உதாரணம், 'முக்காபுலா’.
நேர நெறியாளர். ஒருவருக்கு நேரம் கொடுத்து குறித்த நேரத்துக்கு அவர் வரவில்லை என்றால் கோபப்படுவார். ஒருவருக்குக் கொடுத்த நேரத்தை வேறு எவருக்கும் மாற்றித் தர மாட்டார் - அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்.
முன்பு ஃபியட் கார் வைத்திருந்தார். டிரைவர் கிடையாது. அவரே ஓட்டுவார். சமீப காலமாக நண்பர் வெங்கட்டின் காரில்... டிரைவர் ஓட்டப் பயணிக்கிறார்.
வாலியின் வரிகள் உலகெங்கும் பயணிக்கின்றன. ஆனால் வாலி, தேசம் தாண்டியது இல்லை. ''நான் ஃபாரின் போனது இல்லை; ஆனா, எனக்குள்ளே நிறைய 'ஃபாரின்’ போயிருக்கு. நான் ஃபாரின் போகணும்னா விசா தேவை. எனக்குள்ளே ஃபாரின் போகணும்னா சீசா தேவை'' என்பார் நகைச்சுவையாக.
இப்போது எல்லாம் கவிஞர்கள் பழநிபாரதி, நெல்லை ஜெயந்தா, தொழில் அதிபர்கள் வெங்கட், கிருஷ்ணகுமார் குழாமுடன்தான் வாலியின் பொன்மாலைப் பொழுதுகள் கரைகின்றன.
கோபக்காரர். நியாயம் என்று தெரிந்தால் யாரிடமும் தன் கோபத்தைக் காட்டிவிடுவார் - எம்.ஜி.ஆர். உட்பட.
பிறந்த நாளை அவ்வளவாகக் கொண்டாட மாட்டார். ஆனால், சமீப காலமாக ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஒரு புத்தகம் வெளியிடுகிறார்.
எழுதும் பாட்டில் சந்தேகம் வந்தால், அந்தத் துறை சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்து, அதுபற்றித் தெரிந்துகொள்வார். சமீபத்தில் சந்தேகம் தெளிந்தது - ஐபேட் பற்றி!
கையில் எந்தப் புத்தகம் கிடைத்தாலும் அட்டை டு அட்டை படித்துவிட்டுத்தான் கீழேவைப்பார். மனம் கவர்ந்தால் அதை எழுதியவரைக் கூப்பிட்டுப் பாராட்டி மகிழ்வார்.
எந்தப் பாட்டு எழுதினாலும்... நான்கு பல்லவிகள், நான்கு சரணங்கள் தயாராக இருக்கும். ஜிப்பாவின் இடது பக்கப் பையில் இருந்து ஒரு பல்லவியை எடுத்துத் தருவார். அது பிடிக்கவில்லை என்றால், வலது பக்கப் பையில் இருந்து இன்னொரு பல்லவியை நீட்டுவார்.
இவர் மிகவும் அன்புடன் நேசிப்பவர் வயதில் குறைவாக இருந்தால் அவரை 'என்ன ஓய்...’ என்று உரிமையுடன் அழைப்பார்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்து வைஷ்ணவத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு இருந்தாலும் முருகன் மீது எல்லை இல்லாப் பற்றுகொண்டவர். அவருடைய பக்திப் பாடல் கள் பல முருகனைப் பற்றியதுதான்.
பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிவது என்றால், அலாதி ஆனந்தம்.
உரையாடலுக்கு இடையே 'இதை நான் எதுக்குச் சொல்றேன்னா...’ என்கிற வாசகம் அடிக்கடி வந்து விழும்.
சில ஆண்டுகளாக ரிக்கார்டிங் தியேட்டருக்குப் போவது இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் இவர் வீட்டுக்கே வந்துவிடுகிறார்கள்.
ஒரு பாட்டின் மெட்டை வெற்றி பெறவைக்கும் வித்தை தெரிந்தவர் என்பது இவர் மீதான மதிப்பீடு. இதனால்தான் இன்றும் வாலியின் விரல்களுக்காகக் காத்திருக்கிறது தமிழ் சினிமா.

Vairamuthu - Answers from Vikatan - 2

''தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?

''உங்கள் கேள்வி என் மனதுக்குள் சின்னதொரு தீக்குச்சி கிழித்தது; சிந்திக்கவைத்தது. நல்ல பதிலுக்குக் கொஞ்சம் உழைக்க வேண்டி இருந்தது.
நானறிந்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டு மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் மற்றும் சொச்சம். இந்த 7 கோடிக்குச் சற்றொப்ப மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்திய மதிப்பில் எவ்வளவு என்று ஆராய்ந்தேன்.
6.8 கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி அரசு ஆண்டுக்கு 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.
6.53 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
6.2 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் 64 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
6.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 86 லட்சத்து 53 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
ஆனால், 7.2 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக 98 ஆயிரத்து 213.85 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.
அவையெல்லாம் நாடுகள், நம்முடையது மாநிலம் என்றபோதிலும் மக்கள்தொகையில் சற்றொப்ப நிகர் என்பதனால், இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.
எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத்தக்கது. இன்னும் நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும்; பயணம் நெடுந்தூரம்!''

Monday, January 28, 2013

Vairamuthu Answers - From Vikatan

''மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான் வைரமுத்து கூட்டணி எப்போதும் வெற்றி பெற என்ன காரணம்?''

''முதல் சந்திப்பிலேயே ஒரு முடிவெடுப்போம். படத்தின் சிறந்த பாடல் எதுவென்று கருதுகிறோமோ, அதை எழுதி ஒலிப்பதிவு செய்துவிடுவோம். அடுத்து எழுதவிருக்கும் பாடல்கள் அந்தப் பாடலைத் தாண்ட வேண்டும் என்று பாடுபடுவோம். சிறந்த பாடல் என்று கருதப்பட்ட முதல் பாடலை அடுத்தடுத்த பாடல்களால் கடைசிக்குத் தள்ளக் கடும் முயற்சி மேற்கொள்வோம். 'கடல்’ படத்தில் இடம்பெற்று இன்று உலகப்புகழ் பெற்றிருக்கும் 'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்’ பாடலைவிடவும் மிச்சப் பாடல்கள் உச்சப் பாடல்களாக உணரப்படும்; சற்றே காத்திருங் கள்.''

''ஒவ்வொரு சமூக நிகழ்வின் மீதும் உங்கள் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்ள ஒரு கணிசமான கூட்டம் காத்தி ருக்கிறது. நீங்கள் மௌனம் சாதிக்கிறீர்களே ஏன்?''
'' 'ஒரு கருத்தைச் சொல்ல ஒரு சொல் போதுமெனும்போது இரு சொற்களைப் பயன்படுத்தாதே. அந்தக் கருத்தால் ஒரு பயனும் இல்லையெனும்போது அந்த ஒரு சொல்லையும் விரயம் செய்யாதே.’
சொன்னவர் - சீன அறிஞர் சிங்சௌ.
வாழ்பவன் வைரமுத்து.''

Monday, October 01, 2012

18 Siddhargal


Name : Agastiyar
Tamil Month Of Birth : Markazhi
Tamil Birth Star : Aayilyam
Duration Of Life : 4-Yugas, 48 days
Place Of Samathi : Thiruvananthapuram
Caste : Velalar


Name : Pathanjali
Tamil Month Of Birth : Panguni
Tamil Birth Star : Moolam
Duration Of Life : 5-Yugas, 7 days
Place Of Samathi : Rameshwaram
Caste : ----

 
Name : Kamalamuni
Tamil Month Of Birth : Vaikasi
Tamil Birth Star : Poosam
Duration Of Life : 4000 Years, 48 days
Place Of Samathi : Thiruvarur
Caste : Kuravar


Name : Thirumoolar
Tamil Month Of Birth : Purattasi
Tamil Birth Star : Avittam
Duration Of Life : 3000 Years, 13 days
Place Of Samathi : Chidambaram
Caste : ---


Name : Kuthambisiddhar
Tamil Month Of Birth : Aadi
Tamil Birth Star : Visakam
Duration Of Life : 1800 Years, 16 days
Place Of Samathi : Mayavaram
Caste : Konar


Name : Korakkar
Tamil Month Of Birth : Karthigai
Tamil Birth Star : Aayilyam
Duration Of Life : 880 Years, 11 days
Place Of Samathi : Perur
Caste : Marattiyar


Name : Thanvanthri
Tamil Month Of Birth : Iyppasi
Tamil Birth Star : Punarpoosam
Duration Of Life : 800 Years, 32 days
Place Of Samathi : Vaideeswaran Koil
Caste : Mahavishnu


Name : Sundarandar
Tamil Month Of Birth : Aavani
Tamil Birth Star : Revthi
Duration Of Life : 800 Years, 28 days
Place Of Samathi : Madurai
Caste : Agamudaiyar


Name : Konganar
Tamil Month Of Birth : Chitthirai
Tamil Birth Star : Uthiradam
Duration Of Life : 800 Years, 16 days
Place Of Samathi : Thirupathi
Caste : Yadavar


Name : Chattaimuni
Tamil Month Of Birth : Aavani
Tamil Birth Star : Mirugasirisham
Duration Of Life : 800 Years, 14 days
Place Of Samathi : Thiruvarangam
Caste : Sinhala


Name : Vaanmeegar/ Valmiki
Tamil Month Of Birth : Purattasi
Tamil Birth Star : Anusham
Duration Of Life : 700 Years, 32 days
Place Of Samathi : Ettukudi
Caste : Vedar


Name : Ramadevar
Tamil Month Of Birth : Masi
Tamil Birth Star : Pooram
Duration Of Life : 700 Years, 06 days
Place Of Samathi : Azhagarmalai
Caste : Vishnukulam


Name : Nandeeswarar
Tamil Month Of Birth : Vaikasi
Tamil Birth Star : Visagam
Duration Of Life : 700 Years 03 days
Place Of Samathi : Kasi
Caste : Mirugamagarisi


Name : Idaikadar
Tamil Month Of Birth : Purattsi
Tamil Birth Star : Thiruvathirai
Duration Of Life : 600 Years, 18 days
Place Of Samathi : Thiruvannamalai
Caste : Konar


Name : Machamuni
Tamil Month Of Birth : Aadi
Tamil Birth Star : Rohini
Duration Of Life : 300 Years, 62 days
Place Of Samathi : Thiruparankundram
Caste : Kalludaiyar


Name : Bhogar
Tamil Month Of Birth : Vaikasi
Tamil Birth Star : Bharani
Duration Of Life : 300 Years, 18 days
Place Of Samathi : Pazhani
Caste : Vishvakarma


Name : Karuvoorar
Tamil Month Of Birth : Chittirai
Tamil Birth Star : Hastham
Duration Of Life : 300 Years, 42 days
Place Of Samathi : Karuvoor
Caste : Kannar


Name : Pambattisiddhar
Tamil Month Of Birth : Karthigai
Tamil Birth Star : Mirugasirisham
Duration Of Life : 123 Years, 14 days
Place Of Samathi : Sankarankoil
Caste : Jogi