அகண்ட பால்வெளியில் உள்ள ஏதாவது ஒரு கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா இல்லையா என்று பல வருடங்களாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.
ஏலியன்ஸ் உண்மையிலேயே உள்ளதா இல்லை கட்டுக்கதையா? வாங்க விரிவாக அலசலாம்.
பிரான்ஸ் நாட்டின் அன்றைய மன்னன் நெப்போலியன் பானர்பட்டின் மண்டையோட்டில் அரை அங்குலம் அளவுள்ள வெளிப்பொருள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். கி.பி 1794 ஆம் ஆண்டில் அவர் பல நாட்கள் காணாமல் போயிருந்தார். மீட்கப்பட்டபின் நெப்போலியனே, வித்தியாசமான மனிதனால் தான் சிறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பழங்கால எகிப்தியர்களின் சித்திரவடிவ எழுத்துக்களின் ஆய்வுகள், ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் நைல் பள்ளத்தாக்கிற்கு வந்ததை உறுதி செய்கின்றன. எகிப்தில் காணப்படும் பிரமிட் அமைப்புகள் மனிதனால் உருவாக்கியிருக்க சாத்தியமே இல்லையென்றும், அவையெல்லாம் ஏலியன்களால் உருவானவை என்று கூறுபவர்கள் பலர். 1971 ஆம் ஆண்டு அப்போல்லோ 14 திட்டப்பணியின் அங்கமாக நிலாவில் காலடி வைத்த ஆறாவது மனிதர் என்ற பெயரை பெற்றவர் நாசா விண்வெளி வீரர் எட்கர் மிட்செல்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ரோஸ்வெல் பாலைவனத்தில் 1947- ல் நடந்த விபத்தில் யூ.எப்.ஒ எனப்படும் அன்ஐடெண்டிபைட் பிளைட் ஆப்ஜக்ட், அதாவது பறக்கும் தட்டில் வந்த ஏலியன்கள் இருந்திருக்கின்றனர் என்று மிட்செல் உறுதியாக கூறுகிறார்.
இறந்த ஏலியன் புகைப்படம் ஒன்று அமெரிக்க பத்திரிக்கைகளில் வெளியானது. அது ஒரு குழந்தையின் சடலம் என்று கூறுபவர்கள் பலர். ஆனால் மிட்செல் கூறுகிறார், “ரோஸ்வெல்லில் நடந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். என்னுடைய கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்நிகழ்வு நடந்தது. நான் நிலாவிற்கு சென்று வந்ததும் பல கருத்தரங்கில் பேசும்போது 'அது' ஏலியன் தான் ...குழந்தையின் சடலமல்ல ..என்று கூறியிருக்கிறேன். அமெரிக்க அதிகாரிகள் ரகசிய இடத்தில் 'அதை' பாதுகாத்து வருகின்றனர். என் குடும்ப நண்பரும் அமெரிக்க விமானப்படையின் மேஜர் ஆகவும் இருந்தவர், இது ஏலியன் தான் என்று உறுதிப்படுத்தினார். நிலாவில் இருந்து திரும்பிய பின், பெண்டகனுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் என்னுடைய கதையை கூறி அவர்களின் கருத்தை கேட்டேன்.
அவர்கள் நியூ மெக்ஸிகோவிற்கு சென்று ஆராய்ந்துவிட்டு, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே என்றனர். அமெரிக்க அரசு, பறக்கும் தட்டு விபத்தில் உயிருடனும், சடலமாகவும் ஏலியன்களை கண்டுபிடித்தது. ரோஸ்வெல் சம்பவத்தை அமெரிக்கா மூடி மறைப்பதற்கு காரணம், ஏலியன்ஸின் வருகை நம்மை எதிர்க்கின்ற நோக்கத்துடன் இருந்திருக்கலாம் என்றும், சோவியத் ரஷ்யா இதைப்பற்றி கண்டுபிடித்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் விருப்பமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.
தான் நாசாவில் பணியில் இருந்த காலத்தில் பறக்கும் தட்டுக்கள் பூமிக்கு வந்து போயுள்ளதாக மிட்செல் உறுதியாக கூறுகிறார். ஆனால் இவர் 1995 அன்று வெளியிட்ட ஏலியன் பிரேத புகைப்படத்தை போலி என்று மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வானவியல் நிபுணர்கள், சூரிய குடும்பத்திலிருந்து வெகு அப்பாலிருந்து வரும் ரேடியோ சிக்னல்களைக் கொண்டு ஏலியன்ஸ் வாழ்க்கையை அறிய தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை கொண்டு பால்வெளியையும் விண்மீன்களையும் ரேடியோ சிக்னல்கள் பெற முடியுமா என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ஜூலை 21, 2015 அன்று ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர், (break through initiatives) 'சாதனை முறியடிப்பு முயற்சிகள்' என்ற அமைப்பை, பூமிக்கு அப்பால் ஏதேனும் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என கண்டுபிடிக்க 100 மில்லியன்ஸ் டாலரில் ( சுமார் 650 கோடிகள்) உருவாக்கியுள்ளார்.
இது 10 வருட திட்டமாகும். இந்த திட்டத்திற்கு பிரபல வானவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இவர் வேற்றுகிரகவாசிகள் இருப்பது உறுதியானால், நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சாதனை முறியடிப்பு முயற்சிகள்’ அமைப்பானது அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் சூரிய மண்டலத்திற்கு அப்பால், நமக்கு நெருக்கமாக உள்ள 100 விண்மீன் கூட்டங்களில் ஏலியன்ஸ் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை ஆராயும்.
இந்த அமைப்பின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஸ்டீபன் ஹாக்கிங் “ஏதோ வேற்று கிரகத்தில் உள்ள ஒரு புத்திசாலி உயிரினம் நம் பூமியில் மின்னும் விளக்கொளிகளை கவனித்துக் கொண்டிருக்கலாம். இதன் அர்த்தம் என்னவென்று அதற்க்கு தெரிந்திருக்கலாம். பூமிக்கு அப்பால் வேற்றுகிரக உயிரினத்தை கண்டுபிடிக்க நாம் தீவிரமாக ஈடுபடும் நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.
இந்த அமைப்பின் நோக்கம், வேற்று கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வந்தால் அதை அதிநவீன தொலைநோக்கியை பயன்படுத்தி கண்டறிவதுதான். வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தபின், அவர்களிடம் எந்த வகையில் செய்திகளை அனுப்பலாம் என்று சொல்பவர்களுக்கு 10 லட்சம் டாலர்கள் ( சுமார் ரூ.6.5 கோடிகள்) பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது இந்த அமைப்பு. போட்டியின் முழு விவரங்களை விரைவில் அதன் இணைய தளத்தில் அறிவிக்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்காவின் நாசா அமைப்பு கடந்த ஜூலை 23, 2015 அன்று ஒரு புதிய கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பூமியை போலவே உள்ள அந்த கிரகமானது, பூமியை விட 60% பெரியது. கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கோளுக்கு கெப்லர் 452 b என பெயரிட்டுள்ளது. அது சுமார் 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. அது நமது சூரியனை போன்றே அமைந்துள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவது மட்டுமில்லாமல், பூமியின் சுற்று வட்டப்பாதையின் தொலைவைப்போலவே அதன் தொலைவும் அமைந்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா இல்லையா என்று ஆய்வுகளை மேற்கொள்ள இருகின்றனர்.
வரும் காலங்களில் ஏலியன்ஸ் கண்டுபிடிக்கப்படலாம். சாதி,மதம், நாடு கடந்து நடக்கும் திருமணத்தைப்போல கிரகம் கடந்தும் திருமணம் நடக்கலாம்.
ஏலியன்ஸ் உண்மையிலேயே உள்ளதா இல்லை கட்டுக்கதையா? வாங்க விரிவாக அலசலாம்.
பிரான்ஸ் நாட்டின் அன்றைய மன்னன் நெப்போலியன் பானர்பட்டின் மண்டையோட்டில் அரை அங்குலம் அளவுள்ள வெளிப்பொருள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். கி.பி 1794 ஆம் ஆண்டில் அவர் பல நாட்கள் காணாமல் போயிருந்தார். மீட்கப்பட்டபின் நெப்போலியனே, வித்தியாசமான மனிதனால் தான் சிறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பழங்கால எகிப்தியர்களின் சித்திரவடிவ எழுத்துக்களின் ஆய்வுகள், ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் நைல் பள்ளத்தாக்கிற்கு வந்ததை உறுதி செய்கின்றன. எகிப்தில் காணப்படும் பிரமிட் அமைப்புகள் மனிதனால் உருவாக்கியிருக்க சாத்தியமே இல்லையென்றும், அவையெல்லாம் ஏலியன்களால் உருவானவை என்று கூறுபவர்கள் பலர். 1971 ஆம் ஆண்டு அப்போல்லோ 14 திட்டப்பணியின் அங்கமாக நிலாவில் காலடி வைத்த ஆறாவது மனிதர் என்ற பெயரை பெற்றவர் நாசா விண்வெளி வீரர் எட்கர் மிட்செல்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ரோஸ்வெல் பாலைவனத்தில் 1947- ல் நடந்த விபத்தில் யூ.எப்.ஒ எனப்படும் அன்ஐடெண்டிபைட் பிளைட் ஆப்ஜக்ட், அதாவது பறக்கும் தட்டில் வந்த ஏலியன்கள் இருந்திருக்கின்றனர் என்று மிட்செல் உறுதியாக கூறுகிறார்.
இறந்த ஏலியன் புகைப்படம் ஒன்று அமெரிக்க பத்திரிக்கைகளில் வெளியானது. அது ஒரு குழந்தையின் சடலம் என்று கூறுபவர்கள் பலர். ஆனால் மிட்செல் கூறுகிறார், “ரோஸ்வெல்லில் நடந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். என்னுடைய கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்நிகழ்வு நடந்தது. நான் நிலாவிற்கு சென்று வந்ததும் பல கருத்தரங்கில் பேசும்போது 'அது' ஏலியன் தான் ...குழந்தையின் சடலமல்ல ..என்று கூறியிருக்கிறேன். அமெரிக்க அதிகாரிகள் ரகசிய இடத்தில் 'அதை' பாதுகாத்து வருகின்றனர். என் குடும்ப நண்பரும் அமெரிக்க விமானப்படையின் மேஜர் ஆகவும் இருந்தவர், இது ஏலியன் தான் என்று உறுதிப்படுத்தினார். நிலாவில் இருந்து திரும்பிய பின், பெண்டகனுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் என்னுடைய கதையை கூறி அவர்களின் கருத்தை கேட்டேன்.
அவர்கள் நியூ மெக்ஸிகோவிற்கு சென்று ஆராய்ந்துவிட்டு, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே என்றனர். அமெரிக்க அரசு, பறக்கும் தட்டு விபத்தில் உயிருடனும், சடலமாகவும் ஏலியன்களை கண்டுபிடித்தது. ரோஸ்வெல் சம்பவத்தை அமெரிக்கா மூடி மறைப்பதற்கு காரணம், ஏலியன்ஸின் வருகை நம்மை எதிர்க்கின்ற நோக்கத்துடன் இருந்திருக்கலாம் என்றும், சோவியத் ரஷ்யா இதைப்பற்றி கண்டுபிடித்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் விருப்பமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.
தான் நாசாவில் பணியில் இருந்த காலத்தில் பறக்கும் தட்டுக்கள் பூமிக்கு வந்து போயுள்ளதாக மிட்செல் உறுதியாக கூறுகிறார். ஆனால் இவர் 1995 அன்று வெளியிட்ட ஏலியன் பிரேத புகைப்படத்தை போலி என்று மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வானவியல் நிபுணர்கள், சூரிய குடும்பத்திலிருந்து வெகு அப்பாலிருந்து வரும் ரேடியோ சிக்னல்களைக் கொண்டு ஏலியன்ஸ் வாழ்க்கையை அறிய தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை கொண்டு பால்வெளியையும் விண்மீன்களையும் ரேடியோ சிக்னல்கள் பெற முடியுமா என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ஜூலை 21, 2015 அன்று ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர், (break through initiatives) 'சாதனை முறியடிப்பு முயற்சிகள்' என்ற அமைப்பை, பூமிக்கு அப்பால் ஏதேனும் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என கண்டுபிடிக்க 100 மில்லியன்ஸ் டாலரில் ( சுமார் 650 கோடிகள்) உருவாக்கியுள்ளார்.
இந்த அமைப்பின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஸ்டீபன் ஹாக்கிங் “ஏதோ வேற்று கிரகத்தில் உள்ள ஒரு புத்திசாலி உயிரினம் நம் பூமியில் மின்னும் விளக்கொளிகளை கவனித்துக் கொண்டிருக்கலாம். இதன் அர்த்தம் என்னவென்று அதற்க்கு தெரிந்திருக்கலாம். பூமிக்கு அப்பால் வேற்றுகிரக உயிரினத்தை கண்டுபிடிக்க நாம் தீவிரமாக ஈடுபடும் நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.
இந்த அமைப்பின் நோக்கம், வேற்று கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வந்தால் அதை அதிநவீன தொலைநோக்கியை பயன்படுத்தி கண்டறிவதுதான். வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தபின், அவர்களிடம் எந்த வகையில் செய்திகளை அனுப்பலாம் என்று சொல்பவர்களுக்கு 10 லட்சம் டாலர்கள் ( சுமார் ரூ.6.5 கோடிகள்) பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது இந்த அமைப்பு. போட்டியின் முழு விவரங்களை விரைவில் அதன் இணைய தளத்தில் அறிவிக்க உள்ளது.
இந்த புதிய கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா இல்லையா என்று ஆய்வுகளை மேற்கொள்ள இருகின்றனர்.
வரும் காலங்களில் ஏலியன்ஸ் கண்டுபிடிக்கப்படலாம். சாதி,மதம், நாடு கடந்து நடக்கும் திருமணத்தைப்போல கிரகம் கடந்தும் திருமணம் நடக்கலாம்.
No comments:
Post a Comment