Wednesday, December 14, 2016

Michel de Nostredame - An update

குறி சொல்லும் நிபுணர், இயற்பியலாளர், இயற்கை மருத்துவர் நாஸ்ட்ராடமஸ்ஸுக்கு இன்று பிறந்தநாள். ஹிட்லர் தனது சர்வாதிகாரத்தால் பெற்ற வெற்றி, செப்டம்பர் பதினொன்று தாக்குதல், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர், ஹிரோஷிமா, நாகசகி அணுகுண்டுத் தாக்குதல் உள்ளிட்டவை நாஸ்ட்ராடமஸ்ஸின் கணிப்பின்படியே நடந்துள்ள பகீர் சம்பவங்கள். கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நாஸ்ட்ராடமஸ் கூறிய அனைத்து சம்பவங்களும் நடைபெற்றதால் இனி வரும் காலங்களிலும் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் கண்டிப்பாக நடந்தே தீரும் என உலகம் முழுதும் ஒருசாரரால் நம்பப்பட்டு வருகிறது.


ரஷ்ய-அமெரிக்க உறவு முறிவு, இஸ்லாமிய கிருத்துவ நாடுகளுக்கிடையே நடக்கப்போகும் மூன்றாம் உலகப்போர், துருவப் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு போன்ற அவரது எதிர்கால கணிப்புகள் சில நாட்டு மக்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளுக்குள் பீதி அடையச்செய்கின்றன. இப்படி உலகத்தையே உலுக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் 'தி ப்ரோபேசீஸ்' புத்தகத்தின் ஆசிரியர் நாஸ்ட்ராடமஸ்ஸின் வாழ்க்கை வரலாறு பற்றி நாமும் தெரிந்துகொள்வோம்.


நாஸ்ட்ராடமஸ்ஸின் இயற்பெயர் மைக்கேல் டி நாஸ்ட்ராடேம் (Michel de Nostredame). 1503-ம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, ஃபிரான்ஸ் நாட்டின் செயின்ட்-ரெமி-டி மாகாணத்தில், ஜாக்வஸ் டீ நாஸ்ட்ராடேம் ( Jacques de Nostredame ), ரேனைர் ( Reynière) தம்பதியருக்கு மகனாகப்பிறந்தார். யூதப்பூர்வீகம் கொண்ட இவரது முன்னோர்கள் கிருத்துவமதத்தின் கத்தோலிக்கப் பிரிவில் இணைந்தனர். நாஸ்ட்ராடமஸ், பள்ளி முடித்ததும் தனது பதினைந்தாவது வயதில் அவிக்னன் பல்கலைக்கழகத்தில் வானவியல், கணிதம், ஜோதிடம், இயற்பியல் பாடங்கள் பயின்றார். அப்போது பிரான்சில் பிளேக் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கு இயற்கை மூலிகை மருத்துவத்தின் மூலமாக மருந்து கண்டுபிடிக்க 1521-ம் ஆண்டுமுதல், எட்டு வருடங்கள் ஃஃபிரான்ஸ் நாட்டின் கிராமப்புறங்களில் பயணம் செய்தார். பின்னர் மாண்ட்பெல்லியார் பல்கலைக்கழகத்தில் (University of Montpellier) மருத்துவம் பயின்றார்.


ஓவியர் ஜூல்ஸ் ஸீசர் ஸ்காலிகர் (Jules-César Scaliger) அழைப்பின் பேரில் ஏகன் (Agen) நகருக்குச்சென்ற நாஸ்ட்ராடமஸ், அங்கு தனது வருங்கால மனைவி ஹென்ரிட் டி என்காஸ்ஸை (Henriette d'Encausse) சந்தித்தார். இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மலர, நாஸ்ட்ராடமஸ் ஹென்ரிட்டைக்கரம் பிடித்தார். இந்தத் தம்பதியருக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஃபிரான்ஸ் முழுவதும் பரவிய பிளேக் நோய் நாஸ்ட்ராடமஸ்ஸின் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை. திருமணமான மூன்றே ஆண்டுகளில் மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகியோர் பிளேக் நோயின் தாக்கத்தால் மரணமடைந்தனர். துக்கத்தில் ஆழந்த நாஸ்ட்ராடமஸ், ஃபிரான்ஸில் இருந்து இத்தாலி நோக்கிப் பயணம் செய்தார்.


11 வருடத் தொடர்பயணத்தின் முடிவில் 1545-ம் ஆண்டு மருத்துவர் லூயிஸ் சேர்ரேவுடன் (Louis Serre) சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிளேக் நோய்க்கு, தடுப்புமருத்து கண்டுபிடித்தார். இந்தத் தடுப்புமருந்தை, பின்னாட்களில் தான் வாழ்ந்த ஃபிரான்சின் சலோன் டி மாகாணம் (Salon-de-Provence) முழுவதும் பரப்பினர். இதனால் மக்களிடையே பிளேக் தாக்கம் குறைந்தது. அந்த நகரத்தில் வாழ்ந்த ஆன் போன்சார்ட் (Anne Ponsarde) என்ற பணக்கார விதவையை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உட்பட ஆறு குழந்தைகள் பிறந்தனர். இந்த காலத்தில் நாஸ்ட்ராடமஸ் தன் வாழ்வில் செல்வசெழிப்பில் திளைத்தார்.


இதுவரை மருத்துவத்தின்மேல் ஈர்ப்பு கொண்டிருந்த நாஸ்ட்ராடமஸ் பின்னர் ஒருமுறை இத்தாலி சென்றபோது தனக்குக் குறி சொல்லும் கலை மேல் ஆர்வமும் திறமையும் உள்ளதென்பதை உணர்ந்தார். இதனையடுத்து 1550ம் ஆண்டுக்கான எதிர்காலத்தைக் கணிக்கும் புத்தகத்தை எழுதினார். ஆல்மனாக் (Almanac) என்று கூறப்படும் இப்புத்தகத்தில் பருவமாற்றங்கள், விவசாயிகள் பயிர்நட ஏற்ற காலங்கள், நல்லநேரம், கெட்டநேரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. நாஸ்ட்ராடமஸ்ஸின் குறிசொல்லும் திறமையைப்பார்த்து வியந்த இரண்டாம் ஹென்ரி மன்னரின் மனைவி, அவரது வாழ்நாளின் இறுதி காலமான 1566ம் ஆண்டு, அவரைத்தனது குழந்தைகளுக்கு ஆசிரியராக நியமித்தார். ஜூலை ஒன்றாம் தேதி மாலை நாஸ்ட்ராடமஸ், தன் பணியாளர் ஜீன் டி சாவிங்கியிடம் (Jean de Chavigny) 'நாளை சூரியன் உதிக்கும் போது என்னை நீ உயிரோடு பார்க்க முடியாது' என்று கூறிச் சென்றார். அவர் சொன்னதுபோலவே மறுநாள் காலை முட்டு வாதத்தால் பாதிக்கப்பட்டு அவரது படுக்கைக்கு அருகே இறந்துகிடந்தார்.


தனது மரணத்தையே கணிக்கும் ஆற்றல் பெற்றவர் என்று புகழப்பட்டாலும் விமர்சனங்கள், சர்ச்சைகள் மற்றும் மாற்றுக்கருத்துக்களுக்கு பஞ்சமே இல்லாததுதான் நாஸ்ட்ராடமஸ்ஸின் கணிப்புகள். நாஸ்ட்ராடமஸ்ஸின் குறிசொல்லும் பாணி, ஒருதலைப்பட்சமாக உள்ளது, கிருத்துவ மதத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக உள்ளது என்ற விமர்சனம் அவர் வாழ்ந்த காலத்திலேயே எதிராளிகளிடமிருந்து கிளம்பியது. இன்றளவும் புகழ்பெற்ற இவரது குறி சொல்லும் புத்தகமான 'தி ப்ரோபேசீஸ்' (The Prophecies) பிற மதத்தினரை இழிவுபடுத்துவதாக நினைத்த சிலர் இவரை மனநலம் பாதிக்கப்பட்டவர், முட்டாள் என்று கடுமையாக விமர்சித்தனர். லத்தின், கிரீக் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட இவரது குறி சொல்லும் வாசகங்கள் நான்கு வரிகள் கொண்ட குழப்பமான கவிதை வடிவிலே இருக்கும். இவை குவாட்ரெய்ன்ஸ் (quatrains) என்று அழைக்கப்படும்.


'தி ப்ரோபேசீஸ்' நூலில் இடம்பெற்றுள்ள குவாட்ரெய்ன்ஸ் கவிதைகளைப் படித்து, எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களின் இடம், காலம், நேரம் போன்ற விவரங்களை சரியாத்தெரிந்துகொள்வது கடினம். தான் வாழ்ந்த காலத்தில் தனது எதிராளிகளால் தனக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே நாஸ்ட்ரடமஸ் இவ்வாறு யாருக்கும் எளிதில் புரியாத கணிப்புகளை எழுதினார் என்ற கருத்தும் நிலவிவருகிறது.


நாஸ்ட்ராடமஸ் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரகஅமைப்புகளை வைத்து எதிர்காலத்தைக் கணிக்கிறார். இது சரியான கணிப்பாகாது என்று இன்றளவிலும் பிரபல ஜோதிடர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மற்றொரு சாரார், அவரை இறைதூதராகவே எண்ணுகின்றனர். அவரது கணிப்பின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்துள்ளனர். இன்றளவும் நாஸ்ட்ராடமஸ்ஸின் ' தி ப்ரோபேசீஸ்' புத்தகத்தின் மூன்று பாகங்களுக்கு, பல உலகஅறிஞர்கள், ஜோதிடர்கள் விளக்கஉரை எழுதிக்கொண்டிருக்கின்றனர்.


 பல உலக மொழிகளில் அவரது புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. நாஸ்ட்ராடமஸ் கணிப்பு குறித்த சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், சில நாட்களுக்கு முன், நம்மைக் கடந்துபோன 'வர்தா' புயல் உட்பட கனமழை, பஞ்சம், போர், நிலநடுக்கம் ஆகிய நிகழ்காலப் பேரிடர்கள், நாஸ்ட்ராடமஸ்ஸின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்குமா? என்ற சந்தேகம் நம்மில் பலர் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலாது.

Saturday, November 12, 2016

Tamilnadu - 60 Years, 60 Important Incidents

1956 - சுமார் 200 மக்களை மருதையாற்றங்கரையின் மண்ணில் புதைத்த அரியலூர் ரயில் விபத்து.தமிழக வரலாற்றில் மிகப்பெரும் ரயில் விபத்துகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.
1957- தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராகக் காமராசர் அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன் பொறுப்பேற்றார். உள்ளாட்சி இலாகா அவருக்கு ஒதுக்கப்பட்டது.
1958 - தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் காமராசர் ஆட்சியில் அமலுக்கு வந்தது. அதன்படி இரண்டடுக்கு கொண்ட உள்ளாட்சி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1959- தத்துவங்களையும், அரசியலையும் தமிழ் சினிமாவில் தன் பாடல்வரிகளின் வழியாகப் பேசிய பட்டுக்கோட்டை கலியானசுந்தரனார் தனது 29 வயதில் மறைந்தார்.
1960- தமிழக நில உச்சவரம்புச் சட்டம் அமலுக்கு வந்தது.
1962- கல்வி அறிவு தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு வரவைத்த ‘மதிய உணவுத் திட்டம்’ காமராசரால் அமல்படுத்தப்பட்டது
1963- இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த நிலையில். ஆங்கிலமே இந்திய ஆட்சி மொழியாகத் தொடர்ந்து நீடிக்கும் என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஆட்சிமொழிச் சட்டம்1963ல் அறிவிக்கப்பட்டது.
1965- தமிழ்நாடு தவிர்த்து முதல்முறையாக வேற்றுநாடான சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ராசரத்தினம் என்பவர் சுதந்திர சிங்கப்பூரின் முதல் தமிழ் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
பிற்காலத்தில் அதிமுகவை வழிநடத்திய தலைவர்களான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன்முதலாக இணைந்து நடித்து வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வெளியானது.
1966- ஏ.பி.ஜே அப்துல் கலாம் சுஜாதா உள்ளிட்டவர்களை மாணவர்களாகப் பெற்ற சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (MIT, Chromepet) நிறுவப்பட்டது

1967- எம்.ஜி.ஆரின் வீட்டுக்குத் தயாரிப்பாளர் வாசுவுடன் சென்ற நடிகர் எம்.ஆர்.ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றார்.
1968- கீழ்வெண்மணி வன்முறைச் சம்பவம் நடந்தது, அதில் நூற்றுக்கணக்கான தலித் பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1969- மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை இதனை அறிவித்தார். ஆனால் அதே வருடம் அண்ணாதுரை மறைந்தார். அவரையடுத்து கருணாநிதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
1971- மதுவிலக்கின் மீதான தடையை திரும்பப் பெறுவதாக அப்போதைய கருணாநிதி அரசு அறிவித்தது.
1972- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும், பொதுத்துறை நிறுவனமான சிப்காட்-ம் தொடங்கப்பட்டது
1973- தமிழக நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதர்ச கார் ரகமான ’ப்ரீமியர் பத்மினி’, அந்தப் பெயரில் தனது உருவாக்கத்தைத் தொடங்கியது.
திராவிடர் கழகத்தின் நிறுவனர், தந்தை ஈ.வே.ரா பெரியார் மறைந்தார்.
1974 - தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் சிரிமாவோ பண்டாரநாயகே தலைமையிலான இலங்கைநாட்டு அரசிடம் நட்புறவு அடிப்படையில் தரப்பட்டது.
1975- பிரதமர் இந்திராகாந்தியால் எமர்ஜன்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழகம் இதற்கு எதிராகக் குரல்கொடுத்ததை அடுத்து அரசியல் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1976- தமிழகத்தில் முதன்முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது.
1977 - சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தது. அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றதை அடுத்து எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்.
1978 - மேல்நிலை கல்வி (10 +2) அறிமுகப்படுத்தப்பட்டது.
1980 - கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
1981 - ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஆடம்பர வசதிகள் மீதான வரி சட்டம் அமலுக்கு வந்தது.
1982 - பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் என்பது ஊட்டசத்து உணவு திட்டமாக மாற்றப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.
1983 - தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது.
1984 - எம்.ஜி.ஆருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போலோவில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1985 - பிஎஸ் முத்துராமன் இயக்கத்தில் 100-வது படமான 'ஶ்ரீராகவேந்திரா' திரைப்படத்தில் ரஜினி நடித்தார்.
இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது.
1986 - முதன்முதலில் தமிழகத்தில் ஒரு நபருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
1987 - எம்.ஜி.ஆர். டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.
1988 - டாக்டர் எம்.ஜி.ஆர்-க்கு அவரது மறைவுக்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் ஆகியோர் கூடங்குளம் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1989 - சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க 13 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது.
1990 -தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.
1991 - ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
1992 - பெண்கள் பாதுகாப்புகாக தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் தோற்றுவிக்கப்பட்டது.
1993-தி.மு.க-வில் இருந்து வெளியே வந்து வைகோ ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.
1994 - குற்றாலீஸ்வரன் என்ற தமிழக மாணவன் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி உலக சாதனைப் படைத்தார்
1995-ஜெயலலிதா அரசு மீது பரபரப்பான குற்றசாட்டுகளைக் கூறிய சுப்ரமணியம் சுவாமி, மற்றும் கவர்னர் சென்னா ரெட்டி ஆகியோருக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெற்றன.
1996 - ஜூலை 17-கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில், 'மெட்ராஸ்' 'சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1997- ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான 47 வழக்குகளை விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்களை தி.மு.க அரசு அமைத்தது.
1998- கோவை குண்டு வெடிப்பு, 58 பேர் உயிரிழப்பு
1999 - நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 26 தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
2000- கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கடத்தினார்.
2001- சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 196 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2002- தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2003- டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான சில்லரை விற்பனை தொடங்க சட்டத்திருத்தம்
2004- சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கிய தினம்...
2005- தே.மு.தி.க கட்சியை விஜயகாந்த் தொடங்கினார்.
2006- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க 69 இடங்களைப் பிடித்தது.
2007- மு.க.ஸ்டாலின் செல்வாக்கு குறித்த சர்வே வெளியானதால், மு.க அழகிரி ஆதரவாளர்களால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது.
2008- சென்னையில் கடும் மழை பெய்ததால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாயின.
2009- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 18  இடங்களைப் பிடித்தது. அ.தி.மு.க கூட்டணி 9  இடங்களைப் பிடித்தது.
2010- 2 ஜி விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
2011- தமிழக சட்டமன்றத் தேர்தலில் 203 இடங்களைப் பிடித்து அ.தி.மு.க வெற்றி பெற்றது. தி.மு.க 31 இடங்களைப் பிடித்தது.
2012- தமிழ்நாட்டில் கடுமையான மின் வெட்டு அமலில் இருந்தது. சென்னையில் தினமும் 2 மணி நேரமும், மாவட்டங்களில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரையும் மின் வெட்டு அமலில் இருந்தது
2013- தர்மபுரியில் ரயில் பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளவரசன் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு எழுந்தது.
2014- சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்றதை அடுத்து முதல்வர் பதவியை இழந்தார்
2015- பெரும் மழை வெள்ளத்தால், சென்னை நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
2016- சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

Mystrey behind the Bermuda Triangle

யற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது.

பெர்முடா முக்கோணம் என்றால் என்ன ?

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான். பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’என்கிற கப்பலும், 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது.
1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.

விமானியின் அனுபவம் 
இதுவரை அந்தப் பகுதியில் காணாமல் போன விமானங்களோ, கப்பல்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அந்தப்பகுதியில் இருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம் தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது. அவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தீடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து விமானத்தை இயக்கியவர், மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார். 16 கிலோமீட்டர் நீளமான அந்தக்குகை போன்ற மேகக்கூட்டத்தை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது.

சமீபத்தில் பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு புதிய தியரியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி, அந்தப் பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான காற்றும், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், அறுங்கோண வடிவில் சுழலும் மேகங்கள் 170 மைல் வேகத்தில் ஏற்படுத்தும் காற்று அழுத்தமும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்தக் காற்றுப்படிமங்கள் கப்பல்களையும், விமானங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்ததாக இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து, வானியல் ஆராய்ச்சியாளர் ராண்டி சேர்வெனி குறிப்பிடும்போது, ‘செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இந்தக் காற்று வடிவங்கள் மிகவும் வினோதமான வடிவில் இருக்கின்றன. இவை ஏற்படுத்தும் வெடிப்புதான் அழுத்தத்துக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்றிருக்கிறார்

எப்படியோ இத்தனை ஆண்டு கால மர்மம் ஒருவழியாகத் தெளிவாகி இருக்கிறது


Friday, October 07, 2016

’ஆம்... இதுதான் சோ!’ பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

2004-ம் ஆண்டு. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரம் அது. அ.தி.மு.க-வுக்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு அலை வீசியது. தி.மு.க-வும் ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து ஊடகங்களும் கருத்துக்கணிப்பு நடத்தி, ‘தி.மு.க கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும்’ என்று கட்டியம் கூறிக்கொண்டு இருந்தன.  இப்படியாகச் சூழல் இருந்தபோது... அவர் மட்டும் ஜெயலலிதாவை ஆதரித்து, தொடர்ந்து ‘துக்ளக்’கில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார். ‘‘அ.தி.மு.க கணிசமான இடங்களை வெல்லும்’’ என்றார். ஆனால், அ.தி.மு.க படுதோல்வி அடைந்து, 40 தொகுதிகளையும் இழந்தது. தேர்தல் முடிவுகள் வந்தபின் ‘துக்ளக்’ இதழ்கள் கடைகளுக்கு வந்தன. பொதுவாக, நாம் சொன்ன விஷயம் நடக்கவில்லை என்றால் என்ன செய்வோம்? அதற்கு, ஒரு காரணம் கற்பிப்போம்தானே? ஆனால், இவர் அப்படியாக எதுவும் செய்யவில்லை. இவர் செய்தது தன்னைத்தானே கிண்டல் செய்து, ‘துக்ளக்’கின் அட்டைப் படத்திலேயே ‘கார்ட்டூன்’ போட்டுக்கொண்டதுதான்.
ஆம்... இதுதான் சோ!



2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் சமயம். அதுவரை ஈழத்துக்கு எதிராக இருந்த ஜெயலலிதா, அந்தத் தேர்தலில் தனி ஈழத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்துக்கொண்டிருந்த சோவிடம், “என்ன ஜெயலலிதா இப்போது ஈழத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டாரே...?” என்று கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர், “தேர்தலுக்காக அவ்வாறாகப் பேசுகிறார். அதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...” என்றார். அந்தச் சமயத்தில் இதுமாதிரி ஒரு பதிலைச் சொல்வது தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியைப் பாதிக்கும் என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை.
ஆம்... இதுதான் சோ!

எதை மனதில் நினைக்கிறாரோ... எதை அவர் சரி என்று நம்புகிறாரோ... அதை எப்போதும் பேசக்கூடியவர். தான் ஒருவரை ஆதரிக்கிறோம் என்பதற்காகவெல்லாம், அவர்களின் கருத்துகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர் இல்லை சோ.
எமர்ஜென்சியை முன்பே கணித்தவர்!
‘இந்திரா காந்தி எமர்ஜென்சியைக் கொண்டுவரப்போகிறார்’ என்று முன்பே கணித்து கட்டுரைகளையும், கார்ட்டூன்களையும் முதலில் வெளியிட்டது சோதான். எமர்ஜென்சி நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, ஜெய்பிரகாஷ் நாராயணன், கிர்பாலனி, மொரார்ஜி போன்றோர் சிறையில் இருப்பது போன்ற கார்ட்டூன்களை வெளியிட்டார். அப்போது யாரும் இந்தியாவில் எமர்ஜென்சி வரும் என்பதை நம்பவில்லை. ‘‘சோ அனைத்தையும் மிகைப்படுத்துகிறார்’’ என்றார்கள். ஆனால், அதுதான் இறுதியில் நடந்தது.
எமர்ஜென்சியைக் கடுமையாக எதிர்த்தவர்களில் சோவும் ஒருவர். ஊடகங்கள் கடுமையாகத் தணிக்கைக்கு உள்ளாகின்றன என்பதை சுட்டிக்காட்ட, ‘துக்ளக்’கின் அட்டைப்படத்தை கறுப்பு நிறத்தில் வெளியிட்டார்.  எதையும் அங்கதம் செய்யும் சோ, எமர்ஜென்சியையும் தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார். ஆம். ஒரு நாள் தணிக்கை அலுவலகம் இயங்கிய சாஸ்திரி பவனுக்குச் சென்று, “என் பத்திரிகையை நீங்கள்தான் திருத்துகிறீர்கள். என் பத்திரிகையில் என்ன வரவேண்டும். என்ன வரக் கூடாது என்று நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். சொல்லப்போனால், நீங்கள்தான் ‘துக்ளக்’குக்கு ஆசிரியராகச் செயல்படுகிறீர்கள். அதனால், உங்களுக்குத்தான் சம்பளம் தரவேண்டும். என் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்றார்.
ஆம்... இதுதான் சோ!

அவரிடம் கற்க ஒரு பாடம்!

10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி தந்தார் சோ. அதில் அவரிடம், “உங்களுக்கு எப்படி எமர்ஜென்சியை எதிர்க்க இவ்வளவு துணிச்சல் வந்தது’’ என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர், “என்னிடம் எதுவும் இல்லை. என் தலையில் முடிகூட இல்லை. என்னை அவர்கள் என்ன செய்துவிட முடியும்? அது மட்டுமல்ல, நான் விதியை நம்புகிறவன். என்னுடைய நேரம் முடிந்துவிட்டால், நான் செல்ல வேண்டியதுதான். என் நேரம் இன்னும் இருக்கிறதென்றால், அவர்களால் என்னை என்ன செய்துவிட முடியும்..?” என்றார்.
இன்னொரு கேள்விக்கு, அவர், “இப்போதுதான் எமர்ஜென்சியைக் கொண்டுவர சரியான சமயம். மக்கள், தங்கள் கடமையை உணரவில்லை... சட்டங்கள் மீறப்படுகின்றன.... அதனால் இப்போதுதான் எமர்ஜென்சியைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.
ஆம்... இதுதான் சோ!
கருத்தியல் ரீதியாக அவருடன் நாம் முரண்படலாம்... அவர் முன்வைக்கும் சித்தாந்தத்தை எதிர்க்கலாம். ஆனால், அவரிடம் நாம் கற்க ஒரு பாடம் இருக்கிறது. அது, ‘தான் நம்பும் விஷயத்தை சமரசமின்றி உரக்க பேசுவது’ .  ஆம், அவர் தான் நம்பும் விஷயம் பிறருக்கு அசெளகர்யமாக இருக்கும் என்று அவர் நினைத்து, பிறருக்கு  பிடித்ததுபோல் பேசுவதில்லை. பொது புத்தி, இதைத்தான் நினைக்கிறது என்று இவரும் அதையே வழிமொழிவதும் இல்லை. ஆம், எப்போதும் தன் கருத்தியலை, தத்துவத்தை உரக்கப் பேசுபவர் சோ.

இது நிச்சயம் அவருடம் சித்தாந்த ரீதியாக முரண்படுபவர்களும் கற்க வேண்டிய பாடம்...!


1934 ம் ஆண்டு இதே நாளில் பிறந்த சோ, தன் பள்ளிப்படிப்பை மயிலாப்புர் பி.எஸ் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லுாரிப்படிப்பை லயோலாவிலும் படித்தவர். 1955 ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டப்படிப்பு படித்த சோ ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர்.

தொழிலதிபர் டி.டி.கே வாசுவின் நிறுவனங்களின் சட்ட ஆலோசகராக 2 ஆண்டுகாலம் பணியாற்றியபோதுதான் நாடகங்களின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் ஒய்.ஜி.பட்டு நடத்திவந்த நாடகக்குழுவில் நடிக்கத்துவங்கினார். அப்போது நாடகக்குழுவில் அவருடன் நடித்த இன்னொரு பிரபலம் இன்றைய முதல்வர் ஜெயலலிதா.

சினிமா நாடகம் இவற்றின் மீது பெரிய ஈர்ப்பு இல்லாத குடும்பம் சோவினுடையது. ஆனால் அதற்கு நேர்மாறாக சோ வுக்கு இந்த விஸயங்களில் ஈடுபாடு அதிகம் இருந்தது. நாடகங்களின் மீதான காதலால் நிறுவனத்தின் உரிமையாளர் டி.டி.கே வாசுவிற்கு தெரியாமல் நாடகங்களில் நடிக்கத்துவங்கினார். பல வருடங்கள் வரை அவர் நாடகங்களில் நடித்துவந்த விஸயம் வீட்டாருக்கு தெரியாமல் இருந்தது ஆச்சர்யம்.

சட்டுத் துணிச்சலுக்கு இன்னொரு பெயர் சோ. டி.டி.கே. நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகர் பணிக்கு நேர்முகத்தேர்விற்கு சென்றார் சோ. நிறுவனச்சட்டம், தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா என்றனர். சுத்தமாக தெரியாது என்றார் துணிச்சலாக. “அப்பறம் எப்படி நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக செயல்படமுடியும்“ என்றார் நேர்முகத்தேர்வு நடத்தியவர். எல்லா சட்டங்களையும் மனப்பாடம் செய்திருக்கவேண்டியதில்லை. தேவைப்படும்போது சட்டப்புத்தகங்களை புரட்டிப்பார்த்தால் போதும்” என்றார். “சரி 3 மாதங்களில் தயாராகுங்கள்” என்றார் அதிகாரி. 3 மாதம் ஏன்...15 நாள் போதும் என பட்டென பதிலளித்தார் சோ. அதிர்ந்த நிர்வாகி. அவரது மனதைரியத்துக்காக தேர்வு செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகளை அரங்கேற்றி நல்ல பெயரெடுத்தார் சோ.

பார் மகளே பார் திரைப்படம்தான் சோ நடித்த முதற்படம். 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற நாடகம் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழுவினரால் நடத்தப்பட்டது. அதை சிவாஜியும் பீம்சிங் இருவரும் ஒருநாள் பார்த்தனர். பார்த்ததும் அதை படமாக்க முடிவெடுத்தனர். பல கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை ஒப்பந்தம் செய்த அவர்கள் அதில் சென்னை பாஷை பேசி நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நாடகத்தில் நடித்த சோ வே நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 'நாடகமே சிக்கல், இதில் சினிமா வேறேயா வேண்டாவே வேண்டாம்' என்று கைகூப்பிய சோவை வற்புறுத்தி நடிக்கவைத்தனர். சினிமா ஆசை இல்லாத சோ இப்படிதான் சினிமா நடிகரானார்.

காமராஜர் மீது அன்பு கொண்ட சோ, பிற்காலத்தில் காமராஜர் மற்றும் இந்திரா தலைமையில் பிளவுபட்ட காங்கிரஸை இணைப்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால் தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரசுடன் மட்டும் இணைய விருப்பம் தெரிவித்த இந்திரா ஸ்தாபன காங்கிரஸை இணைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். சோவின் முயற்சி வெற்றிபெற்றிருந்தால் தமிழகத்தில் அரசியல் காற்று திசைமாறியிருக்கும்.

துக்ளக் பத்திரிகை துவக்கப்பட்டதும் ஒரு சாதாரண விஷயத்திற்காகத்தான். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உரையாற்ற சென்ற சோவிடம் மாணவர்கள் பல கேள்விகள் கேட்டனர்.  சகட்டுமேனிக்கு அதேசமயம் சரியான பதில்களை சொல்லி அசத்தினார் சோ. உடன்வந்த நண்பர்கள் 'நீ என்ன பெரிய மேதாவியா...அரசியல் பொருளாதாரம் அறிவியல் என எதைகேட்டாலும் பதில் சொல்கிறாய்...இத்தோடு இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்' என்றனர். 'பேசவே கூடாதா...அப்படியென்றால் எழுதுகிறேன்' என்றார் சோ. 'நீ எழுதுவே யார் அதை பத்திரிகையில் போடுவார்கள்' என்றனர் நண்பர்கள் கிண்டலாக. 'ஏன் நானே ஒரு பத்திரிகை ஆரம்பிச்சி எழுதுறேன்.' என்றார் சடாரென.

ண்பர்கள் திரும்பவும், ' எதை வேணும்னாலும் பேசிடுவ... ஆனால் எழுத முடியாது' என்றனர். நண்பர்களின் பேச்சை சீரியஷாக எடுத்துக்கொண்டு பத்திரிகை துவக்கும் முடிவுக்கு வந்தார் சோ. இந்து பத்திரிகையில் தனது பத்திரிகை துவங்கும் எண்ணத்தை வெளியிட்டு ஆரம்பிக்கட்டுமா வேண்டாமா“ என்று கேட்டிருந்தார். ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்தன. சோவிற்கு நம்பிக்கை பிறந்தது. கூடவே துக்ளக் பிறந்தது.

மர்ஜென்சி காலத்தில் அதிகம் தணிக்கை செய்யப்பட்ட இதழ் துக்ளக். எமர்ஜென்சியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அரசியல் பத்திரிகைகளில் துக்ளக்கிற்கு தனியிடம் உண்டு. எமர்ஜென்சியின் கொடுமையை சொல்வதற்காக தன் ஒரு இதழின் அட்டைப்படத்தை கருப்பாக அச்சிடடு வெளியிட்டவர் அவர்.

துக்ளக்கில் எம்.ஜி.ஆரைப்பற்றி கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தநேரம். எம்.ஜி.ஆருடன் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் சோ. படத்தின் இயக்குனர் ப. நீலகண்டன், எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்துவதற்காக, 'என்ன சோ உங்க துக்ளக் எப்படி போகுது' என்றார். நல்லா போகுது என்றவரிடம் 'கலைமகள் விற்பனை எப்படி' என்றார் திரும்ப. 'பரவாயில்லை' என்றார் சோ. இதுதான் சமயம் என நீலகண்டன், 'பாருங்க, தரமான பத்திரிகை விற்கமாட்டேங்குது...தரமில்லாத பத்திரிகை நல்லா போகுது” என்றார் நக்கலாக. உடனே சோ, 'ஆமாம் சார், தரமுள்ள படங்கள் ஓடுவதில்லை. தரமில்லாத படங்கள் பல ஓடுகின்றன. பல படங்கள் தோல்வி. எம்.ஜி.ஆரின் என் அண்ணன் நல்லா போகுது” என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சியான எம்.ஜி.ஆர். நீலகண்டன் சொன்ன கேட்கமாட்டீங்க...தேவையா இது.“ என தலையிலடித்துக்கொண்டார்.

ரசியல் விமர்சனங்களையும் தனிப்பட்ட நட்பையும் எப்போதும் சேர்த்து குழம்புவதில்லை சோ. கடுமையான அரசியல் விமர்சனங்களுக்கிடையேயும் சம்பந்தப்பட்டவர்கள் அவருடன் நட்பு பாராட்டுவார்கள். இப்படி ஆரோக்கியமான இதழியல் பணியை அவர் மேற்கொள்கிறார்.

பாஜகவில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட எந்தவித முகாந்திரமும் இல்லாதபோதே தமிழக வாக்காளர்களுக்கு அவரை பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்தவர் சோ. அத்தனை தீர்க்கதரிசனம்.

70களில் சோ வின் நாடகங்கள் ஆங்கில பெயரகள் இருக்கும். இது பல தமிழார்வலர்களை கோபம் கொள்ளச்செய்தது. ஆனால் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு மேடையில் சோவின் இந்த குணத்தை கடிந்துகொண்ட டி.கே சண்முகம், 'தமிழ் நாடகங்களுக்கு ஆங்கில பெயர் வைப்பது தவறு. சோ இதை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்றார். அதற்கு பதிலளித்த சோ, 'அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இனி தன் நாடகங்களுக்கு ஆங்கிலப்பெயர் சூட்டுவதில்லை' என்றார். நடந்தது என்ன தெரியுமா...அவரது அடுத்த நாடகத்தின் பெயர் கோ வாடீஸ். இது லத்தின் மொழி.! இதுதான் சோ.

த்திரிகையாளர் , அரசியல், விமர்சகர் ,எழுத்தாளர், நடிகர் என்று மட்டும் இயங்கி வந்தவரை எம்.பியாகவும் ஆக்கியது முந்தைய பாஜக அரசு. மாநிலங்களவைக்கு தேர்வான அவர் தன் எம்.பி நிதியிலிருந்து தான் செலவு செய்த நிதி, மீதமான தொகையின் வரவு செலவு கணக்குகளை தனது துக்ளக் இதழில் வெளியிட்டார். அரசியல்வாதிகளிடம் இல்லாத அரிய குணம் இது.

மிழக பத்திரிகையாளர் என்றாலும் இந்திரா, மொரார்ஜி, ஆச்சார்ய கிருபாளினி, உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். தமிழகத்தின் மிக மூத்த தலைவர்களும் அவரது ஆலோசனைக்கு மதிப்பளித்தனர். எந்த பிரச்னையிலும் தனக்காக பார்வையில் ஒரு தீர்வை சொல்வது அவரது பாணி.

ம் பத்திரிகையில் மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளித்து வெளியிட்டவர் சோ. துக்ளக் இதழில் வரும் ஒரு கட்டுரை தனக்கு உடன்பாடில்லாததை தனது கேள்வி பதில் பகுதியில் வெளிப்படையாக சொல்லிவிடுவார்.

ஆச்சர்யமாக சில கட்டுரைகளுக்கு மறுவாரம் அவரே மறுப்பு கட்டுரை எழுதுவார். கோஷ்டி அரசியலில் அதிமுக அதகளப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 'கூவம் நதிக்கரையினிலே' என அங்கத சுவையுடன் அவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி கதாபாத்திரங்களை அமைத்து  வெளியிட்ட தொடர் அவரது (அசட்டு)துணிச்சலுக்கு சாட்சி.

ரு முறை துக்ளக் இதழின் கடைசிப்பக்கம் அச்சிடாமலேயே வெளிவந்தது. அதன்மேல், ' செய்தி எதுவும் இல்லை. தாய்மார்கள் தங்கள் வரவு செலவு கணக்குக்கு இந்த பக்கத்தை உபயோகப்படுத்திக்கொள்ளவும்' என குறிப்பு வெளியிட்டிருந்தார்.

துக்ளக்கின் முதல் அட்டைப்படம் மங்களகரமாக வரவேண்டும்...எந்த தலைவரின் படத்தைப்போட்டு அச்சிடலாம். முதல் இதழே வாசகர்களிடம் பளிச்சென ஒட்டிக்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்குழு பேசி முடிவெடுக்க, சோவின் யோசனையில் முதல் இதழின் அட்டைப்படம் வெளியானது. ஆச்சர்யமும் அதிர்ச்சியுமடைந்தார்கள் வாசகர்கள்.

ஆம்...2 கழுதைகள்  பேசிக்கொள்வதுபோல் அட்டைப்படம் வெளியானது. முதல்கழுதை, 'சோவின் பத்திரிகை வெளிவந்துவிட்டதாமே' என்கிறது. அதற்கு அடுத்த கழுதை, 'அப்படியா இனிமேல் நமக்கு நல்ல விருந்துதான் எனச் சொல்கிறது. இதுதான் சோ!

Apollo hospital

ரசாங்க ஹாஸ்பிடல் வேண்டாம், என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் டிரீட்மென்ட் வேணும்ன்னு வர்றவங்களுக்காக வெளிநாட்டுல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைக்கப் போறோம். டாக்டர்கள் கூட வெளிநாட்டுல இருந்து வரப் போறாங்க. இதன் மூலமா வெளிநாட்டுப் பயணக் கட்டணம்,நேர விரயம்,மொழிப் பிரச்னை ஏதும் இல்லாம சிகிச்சையைக் குறைந்த செலவுல எடுக்கலாம் " 33 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ ஆரம்பிக்கப்பட்ட போது பிரதாப் ரெட்டி சொன்ன வார்த்தைகள்தான் இவை.
ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டி படித்தது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில். 1983-ம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை இன்று இந்தியா முழுவதிலும் 69 மருத்துவமனைகள் என கிளைகளை பரப்பி இருப்பது, ரெட்டி வாழ்க்கையின் நெடும் பயணத்தின் வெற்றி தான் என்கிறார்கள் மருத்துவ உலகில்.

தொலைநோக்கு
நாள் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்த பிரதாப் ரெட்டி என்கிற அந்த இளைஞன், கார்ப்பரேட் மருத்துவமனை தொடங்கப் போவதாக 33 வருடத்துக்கு முன்பு கூறியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் 150 படுக்கையுடன் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை இன்று 12 நாடுகளில் 69 மருத்துவமனைகளையும் 9,500 படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவ சாம்ராஜ்யமாக வளர்ந்து உள்ளது


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை அப்போலோ அளித்து வருகிறது. 60 ஆயிரம் செவிலியர்கள் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் என தற்போதைய வளர்ச்சி எல்லாமே 'மெடிக்கல் மிராக்கிள்' பிரம்மாண்டம் தான். வருடத்திற்கு 3லட்சத்து 70 ஆயிரம் உள்நோயாளிகளும் 33 லட்சம் வெளிநோயாளிகளும் அப்போலோ வந்து செல்கின்றனர். இந்த வருடத்தில் மட்டும் 5,900 மூட்டு ,இடுப்பு அறுவை சிகிச்சைகளும், 14 ஆயிரம் நரம்பு அறுவை சிகிச்சையும், 400 கல்லீரல் மாற்றும், 1,100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளன. 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 100 கோடி அதிகம். நாள் ஒன்றுக்கு எல்லா செலவுகளும் போக 2 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது அப்போலோ.

பிரபலங்களால் பிரபலம்
1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ பிரபலம் ஆனதே 1984-ல்தான்.  அப்போதுதான் எம் .ஜி .ஆர். சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த 10 நாட்களும் அப்போலோ ஏரியாவை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். எம் .ஜி .ஆர் உடல் நிலை குறித்த அறிக்கைகளை அப்போது உடனுக்குடன் வெளியிட்டது அப்போலோ. அதன் பிறகு கடந்த 2002-ம் ஆண்டு உடல்நல குறைவால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முரசொலி மாறனை பார்க்க, திமுக தலைவர் கருணாநிதி தினமும் அப்போலோ வந்தார். அப்போதும் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது அப்போலோ. சென்ற 2011-ம் ஆண்டு தொடர் பிரசாரத்தால் கருணாநிதியும் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். ரஜினியும் உதடு சிகிச்சைக்காக அப்போலோ வந்துள்ளார். இப்படி அரசியல், சினிமா நட்சத்திரங்களின் மருத்துவமனையாகத் திகழ்கிறது அப்போலோ.


எல்லாமே காசு தான்..... 
இந்தியாவின் அத்தனை மெட்ரோ நகரங்களிலும் அப்போலோ மருத்துவமனை உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதுரை,கோவை, காரைக்குடி என இரண்டாம் நிலை நகரங்களிலும் தனது கிளைகளை தொடங்கியுள்ளது.33 வருடத்திற்கு முன்பு ரெட்டி சொன்னது போல், அப்போலோ இப்போது பணக்காரர்களின் மருத்துவமனை தான். நட்சத்திர ஹோட்டல்களில் வசூலிக்கப்படும் அறை வாடகையை விட அப்போலோ ரூம் வாடகை அதிகம். மேற்கு உலக நாடுகளில், மருத்துவமனைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் இயக்குகின்றன. இந்தியாவில் அப்படி ஒரு கார்ப்ரேட் மருத்துவமனை இருக்குமானால் அது அப்போலோ மட்டுமே. இங்கு நோயாளிகளுக்கான கட்டணங்கள் எல்லாமே பேக்கேஜ் முறையில் தான் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நோய்க்கே லட்சங்கள் இல்லாமல் நீங்கள் அப்போலோவிற்குள் நுழைய முடியாது. 3,500 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரை அப்போலோவில் அறைகள் உள்ளன என்பது கூடுதல் தகவல்.
ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு
செப்டம்பர் 22-ம் தேதி உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் ஆகின்றன. அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் கால் பதித்த ஒவ்வொருவரின் மனதிலும், முதல்வர் எப்படி இருக்கிறார் என்ற கேள்வியோடு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகிருக்கும் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுவதைத் தவிர்க்க இயலாது. அதுபற்றிய ஒரு கணிப்பு.....
முதல்வர் ஜெயலலிதா தங்கியுள்ள அப்போலோ மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில் மொத்தம் 30 அறைகள் உள்ளன. முதல் 2 நாட்களுக்கு மற்ற நோயாளிகளும் அதில் இருந்தனர். அதன் பின்னர் அங்கு இருந்த அனைவரும் மாற்றப்பட்டு முதல்வர் மட்டுமே அந்த தளத்தில் இருக்கிறார்.அவருக்கென தனியாக அறை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையின் அறை வாடகை பட்டியல்படி பார்த்தால், உயர் ரக அறையான சூட் ரூமின் ஒரு நாள் வாடகை 26,300 ரூபாய். இரண்டு சூட் ரூம்களை இணைத்து புது அறையாக மாற்றப்பட்டு இருந்தால் ஒருநாளைக்கு முதல்வர் அறைக்கு மட்டும் 52 ஆயிரத்து 600 ரூபாய் வாடகையாக இருக்கும். முதல்வர் தங்கி இருக்கும் அறையில் அதிகபட்ச வசதிகள் செய்யப்பட்டு இருப்பதால் அந்த அறையின் ஒரு நாள் கட்டணம் லட்சத்தை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.  இதுபோக அந்த தளத்தில் உள்ள மற்ற 28 அறைகளில் 8 அறைகள் பொது வார்டாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.பொது வார்டுக்கு, ரூம் ஒன்றுக்கு 3,500 ல் இருந்து 5,200 ரூபாய் வரை நாள் வாடகை வசூலிக்கப்படுகிறது. முன்பு எம்.ஜி.ஆர் தங்கி சிகிச்சை பெற்றபோது, அந்த அறையின் கட்டணம் ரூ.525 தான்.

அடுத்த 10 அறைகள் தனி வார்டுகள் ஆகும். அறை. ஒன்றுக்கு ரூ.8,500-ல் இருந்து ரூ.8,800 வரை உள்ளது. அதன்படி 10 நாட்களுக்கு ரூ. 85 ஆயிரம் ஆகிறது. மீதம் உள்ள அறைகள் மூன்று வகை சூட் ரூம்கள் உள்ளன. அதன் தொடக்க வாடகை 12,500 ரூபாயில் இருந்து 26,300 வரை உள்ளது. மொத்தம் முதல்வர் தங்கிய, தங்காத என அந்த தளத்துக்கான ஒரு நாள் வாடகை மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 600 ரூபாய். 12 நாட்களுக்கு 38 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் வரை ஆகும் என்கின்றனர் .

வெளிநாடுகளில் இருந்து வந்த மருத்துவர்கள் 
இதற்கு முன்பு சிகிச்சை அளிக்க வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்கள், ஒரு முறை அப்போலோ வந்து செல்ல 50 லட்ச ரூபாய் வரை வாங்கியதாகக் கூறுகின்றனர்.  இங்கேயே தங்கி சிகிச்சை அளித்தால் அந்த தொகை மேலும் கூடும். முதல்வர் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவர்கள் இதுவரை 2 முறை வந்து இருக்கிறார்கள் . வெளிநாடுகளில் இருந்து அவர்கள் விலையுர்ந்த மருந்துகளையும் கொண்டு வந்ததாக கூறுகின்றனர். லண்டன் மருத்துவருக்கு முன்பு புகழ் பெற்ற இந்திய மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று வந்து சிகிச்சை அளித்து விட்டு சென்றது. அதேபோல் வெளிநாட்டு மருத்துவர்கள், சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்க, கன்சல்டிங் தொகையாக நிமிடத்திற்கு லட்சங்களில் வாங்குவது வழக்கம். முதல்வரின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை பெறபட்டது.
ஆறாம் தேதி அப்போலோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், தற்போது சிகிச்சை அளித்து வரும் இதய, சுவாச ,சர்க்கரை நோய் நிபுணர்கள். சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளது .இவர்கள் அனைவருமே உலகில் முதல் நிலை மருத்துவர்கள். இவர்களின் கட்டணங்கள் எல்லாம் மணிக்கு இவ்வளவு என்று தான் வாங்கப்படும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
 

Monday, October 03, 2016

Rajendra Chola’s Portrait For Mazgon Docks: A Tribute To The Naval Might Of Cholas

According to this report in The Times of India, the governor and chief minister of Maharashtra will dedicate a portrait of the Chola king Rajendra Chola I to Mazgon docks. This is fitting as the Cholas had arguably the best organised navy in all of Indian history.



This occasion though, also gives Indians an opportunity to reflect on how they approach their own history. For, in India, except for a handful of icons, all other history makers are remembered regionally and not nationally. So, Krishnadeva Raya remains an icon only in south India; a leader like Lachit Borphukan of only the Assamese; Marthanda Varma, who defeated the Dutch at sea, remembered in Kerala alone, and so on.

Southern India, per se, seems to suffer disproportionately from this approach to history. While the Rajputs, the Marathas, and the rulers of the Gangetic delta still find mention in history books, leaders and change-makers, who belonged to the south don’t in the same proportion.
There are more chances of a student in south India reading about the imperial dynasties of the north than a student in north India reading about a ruler like Rajendra Chola I.

It is in this context that the Maharashtra administration’s decision to dedicate Rajendra Chola’s portrait to Mazgon docks should be welcomed. Especially because, the Cholas were a great naval power themselves.

This aspect of their reign can hardly be described better than has been done by author Sanjeev Sanyal in his new book, The Ocean of Churn.

Given below is an excerpt:
“The Cholas were one of the three clans, who dominated the southern tip of India in ancient times. During the period of Pallava rule, they had accepted the overlordship of Kanchi but still retained significant political clout. At the end of the ninth century, a Chola general called Aditya helped the Pallavas crush a revolt by the Pandyas, the other ancient Tamil clan. As a reward, he seems to have been given sizeable new territories. Aditya used the new resources to build up his military capability and in AD 873 he marched against his Pallava overlords. The Cholas defeated and killed the last Pallava king Aparajita (whose name ironically means ‘he who cannot be defeated’). Aditya took care, however, to marry a Pallava princess and thereby absorb their lineage into his own.

Over the next several decades, the Cholas steadily expanded their kingdom. They repeatedly defeated the combined armies of the Pandyas and their Sri Lankan allies. However, not all their military campaigns went well. When the Cholas attempted to expand northwards, they were beaten back by the Rashtrakutas who had replaced the Chalukyas in the Deccan plateau. In fact, the Rashtrakutas pushed back and occupied the old Pallava capital of Kanchi. It took several years for the Cholas to recover from the defeat but they seemed to have clawed back the lost territory by the time Rajaraja Chola came to the throne in AD 985.

Rajaraja is widely regarded by Tamils as their greatest king. He defeated the combined armies of the Pandyas, the Sinhalese and the ruler of Kerala. This gave him control over ports on both the eastern and western coasts. Next he decided to teach the Sri Lankans a lesson. A naval raid occupied the north of the island and sacked the Sinhalese capital of Anuradhapura. The Maldives was also added to the empire. As thanksgiving for his victories, Rajaraja then built the enormous Brihadeswara temple dedicated to Shiva. It is now a UNESCO World Heritage Site.

The next Chola ruler was Rajaraja’s son Rajendra, who assumed the throne in 1014. He initially had to put down revolts by the old rival clans and consolidate his control over Sri Lanka. He then led an extraordinary military expedition that made its way north to the banks of the Ganga. Although the Cholas did not attempt to maintain control over these northern lands, Rajendra was clearly very proud of having made his way to the holy river. Water from the Ganga was carried back in golden vessels and a new capital was built—‘Gangaikonda Cholapuram’ meaning, ‘The City of the Chola who brought the Ganga’.

From the perspective of Indian Ocean history, however, the most significant event of Rajendra’s rule was a major naval raid on the Sri Vijaya kingdom of Sumatra and Malaya. In order to appreciate the historical context of this event, one needs to step back and understand the geo-political dynamics of the times. The maritime trade route between India and China had become very lucrative and there were two main routes. The first passed through the Straits of Malacca, between the Malay peninsula and Sumatra. The Sri Vijaya kingdom controlled this route. The second, more southerly route, passed through the Sunda straits between Sumatra and Java. Although it was a bit of a detour for those going to China or Champa, it had better access to the spice growing Maluku and Banda islands. This route was usually controlled by the Javans. Not surprisingly, there was constant rivalry between the Sri Vijaya and the Javanese kingdoms.

The late tenth century was a period of prosperity in the Indian Ocean rim as trade boomed between the Song empire in China, the Cholas in southern India and the Shiite Fatimid caliphate that controlled Egypt and the Red Sea. The rivalries of South East Asia were proving to be a major threat to this economic pipeline. In AD 987, a Sri Vijaya diplomatic mission made its way to China. During its stay in China, the diplomats were informed that their country was under attack from the Javan kingdom of Mataram.

They decided to head home but the war escalated and the mission found itself stranded in Champa for a year. It is likely that they received new instructions from the capital for they headed back to China and pleaded with the Song emperor to place Sri Vijaya under its protection. Thus, China came to have influence in the region.

The Sri Vijaya would have been aware that the entry of the Chinese into the Indian Ocean could elicit a response from the Cholas. Thus, they simultaneously sent missions to the Chola kings as well as made generous grants to Hindu and Buddhist temples in Chola ports. Amusingly, Chinese records show that the Sri Vijaya were playing a double game because their diplomats were deliberately misrepresenting the situation by claiming that the Cholas paid tribute to them!

The Sri Vijaya seem to have used Chinese protection to build up their own strength. Not surprisingly, this caused their neighbours to become concerned. Around 1012, Suryavarman I, the king of Angkor, chose to send an unusual gift to Rajendra Chola — his personal warchariot with which he had defeated his enemies. In the Indic cultural context, such a gift has great symbolic importance and it is likely that Angkor was trying to woo the Cholas as a way to counter-balance the Sino-Sri Vijaya alliance. It is also possible, that Angkor was trying to reopen the old trade route through the Isthamus of Kra as a way to bypass the contested straits. Amidst all this hectic diplomacy, the Cholas sent a direct diplomatic mission to China in 1015.

The ground situation, however, suddenly changed in 1016 when the Sri Vijaya and their allies defeated the Javanese and sacked the Mataram capital. This left the Sri Vijaya in control of both sea routes. We have evidence to suggest that it soon exploited this situation by exacting exorbitant tolls on merchant ships. Rajendra Chola probably sent a small naval expedition to Sumatra in 1017 as a warning but it was not taken seriously. Thus, the Chola returned in 1025 with a much larger fleet.
We do not know the exact sequence of events, but a study of the available information suggests the following: The fleet probably assembled near the main Chola port of Nagapattinam. Appropriately for a port that traded with South East Asia, the name means ‘Port of the Nagas’. There is still a major port there but the medieval port was probably several kilometres to the south. The Chola fleet would have first sailed south towards Sri Lanka before swinging east using ocean currents that would have taken them across to Sumatra. They probably then sailed down the west coast of the island towards the Strait of Sunda where they may have been resupplied by Javanese allies and picked up local guides.

The fleet now made its way north into the Straits of Malacca and systematically sacked Sri Vijaya ports along the way. Finally, we are told that the Cholas decisively defeated the main Sri Vijaya army in Kadaram (now Kedah province in Malaysia). The invading force then withdrew, stopping by at the Nicobar Islands on their way home.

The Chola raid significantly diminished Sri Vijaya power but it is remarkable that the Chinese did not do anything to support their supposed vassals. It is possible that the Chinese were just as annoyed at Sri Vijaya’s rent extraction and had entered into an understanding with the Indians. The Sumatrans too seem to have accepted their reduced status as they continued to send ambassadors to the Chola court and even participated in a joint diplomatic mission to China. When a Chola naval fleet returned to Kadaram in 1068, it was in support of a Sri Vijaya king against his local rivals. Meanwhile, with external threats diminished, Java began to rebuild itself under a Balinese price, Airlangga. The process of revival would culminate in the great Majapahit empire in the fourteenth century.”

Sunday, October 02, 2016

கீழடி அகழாய்வு மையம் - Samples of Tamilian's history

கீழடி கிராமம் (Keezhadi) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமம் ஆகும். மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.

முத்துமணிகள், பெண்களின் கொண்டைஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன.

வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.

இந்திய-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.








"கீழடியில் இப்போது என்னென்ன தகவல்கள் கண்டறியப்பட்டிருக்கிறது?"

"கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கிறது. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டு முன்பான தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு வழிக்கோளாக அமையும். இப்போது, இருக்கும் மதுரையில் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய எவ்விதத் தடயங்களும் இல்லை. ஆனால், கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைக்கின்றன. சங்க இலக்கியத்தின் படி மதுரை என்பது திருபுவனத்துக்கு நேர் மேற்கேயும் திருப்பரங்குன்றத்துக்கு கிழக்கேயும்தான் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் மதுரை வடகிழக்கில் இருக்கிறது. இலக்கியம் சொன்ன இடத்தில் கீழடிதான் இருக்கிறது."


"ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிக்கு இப்படியான முனைப்புகள் ஏன் எடுக்கப்படவில்லை?"
"இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் கூட தமிழகத்தில் இனக்குழு நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள்தான் இன்னும் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் முதன்முறையாக தமிழகத்தில் ஒரு சங்ககால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கூட புதையிடம்தான். ஆனால் கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் எல்லாம் இருந்த ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹராப்பா நாகரிகத்துக்கு இணையான தொல்லியல் களம் தென்னிந்தியாவில் இங்கு மட்டும்தான் இருக்கிறது."

Saturday, September 17, 2016

50 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி பிரச்னைக்கு கலாம் சொன்ன தீர்வு!

காவிரி நீர் மீதான தமிழகத்தின் உரிமையை ஒவ்வொரு ஆண்டும் போராடிப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், ' இதற்கான தீர்வைப் பற்றி தமிழக, கேரள, கர்நாடக சட்டசபைகளில் பேசியிருக்கிறார் அப்துல் கலாம். அதை செயல்படுத்துவதற்குக்கூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை' என்கிறார் அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ். 
காவிரி விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, இன்று மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகளின் பந்த் நடந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்வரத்து தாமதமானதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பொய்த்துப் போய்விட்டது. இதனால் பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் விவசாயிகள். " காவிரி நீர் பிரச்சினை என்பது 42 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றமே இந்தப் பிரச்னையைக் கையாண்டு வருகிறது. இதைச் சொல்வதற்குக் காரணம், மத்திய அரசிடம் இருந்தோ கர்நாடக அரசிடம் இருந்தோ நமக்கு உரிய நியாயம் கிடைப்பதில்லை" எனக் கொந்தளிப்போடு பேசுகிறார் 'அப்துல் கலாம் விஷன் இந்தியா' அமைப்பின் வெ.பொன்ராஜ். இதுகுறித்து விரிவாகவே நம்மிடம் பேசினார். 
" தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள 31 அணைகளின் மொத்த கொள்ளளவு 51.59 பில்லியன் கனமீட்டர். இதுவரை, 23.50 பில்லியன் கன மீட்டர் (BCM) கொள்ளளவு கொண்ட அணைகளை கர்நாடகா கட்டியிருக்கிறது. முறையே, ஆந்திரா-17.123 பில்லியன் கனமீட்டர், தெலுங்கானா-2.921 பில்லியன் கனமீட்டர், தமிழ்நாடு-4.229 பில்லியன் கனமீட்டர், கேரளா- 3.829 பில்லியன் கனமீட்டர் கொள்ளளவு உள்ள அணைகளைக் கட்டியிருக்கின்றன. இந்தியா முழுவதிலும் வருடத்திற்கு 1,500 பில்லியன் கனமீட்டர் அளவு தண்ணீர் வெள்ளத்தினால் கடலில் கலக்கிறது. தென்னக நதிகளில் இருந்து வரும் வெள்ளத்தில் மட்டும் 84.9 பில்லியன் கனமீட்டர், அதாவது 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. 1970-ம் ஆண்டிற்குப் பிறகு 271 டி.எம்.சி கொள்ளவு கொண்ட 6 பெரிய அணைகளை தமிழ்நாடு கட்டியிருக்கிறது. இந்த ஆறு அணைகளில் மேட்டூர் தான் பெரிய அணை. அதன் கொள்ளளவு 2.647 பில்லியன் கன மீட்டர். ஒரு நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து, அது பாய்ந்தோடி வரும் பாதையில் உள்ளவர்களை காட்டிலும், அந்த நதி எங்கு முடிவடைகிறதோ, அந்த இடத்தில் வசிக்கும் மக்களின் விவசாய மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு முன்னுரிமை உண்டு என்பது, உலக முழுவதும் பின்பற்றக்கூடிய சட்டமாகும். அந்த உலக வழக்கப்படியே தமிழகம் போராடுகிறது. இந்திய ஜனநாயக நாட்டில் ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலமாக இன்னமும் தமிழகம் போராடிக் கொண்டே இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டிய சாதாரண கடமையை கூட மத்திய அரசு வேண்டுமென்றே தாமதிக்கிறது. தமிழக முதல்வரின் சட்டப் போராட்டத்தால் ஆறு ஆண்டுகள் கழித்தே வெளியிடப்படுகிறது. 
எப்பொழுதெல்லாம் தண்ணீர் பற்றாக்குறை வருகிறதோ, அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் நியாயத்தை சொல்லி தமிழகத்திற்கு அதன் உரிமையான 419 டி.எம்.சி தண்ணீரைவிடச் சொன்னால், உடனே கர்நாடக அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடப்பது மட்டுமல்ல, கர்நாடகாவில் வாழும் தமிழர்களை தாக்கி, அவர்களது உடமைகளை, வாகனங்களை, கடைகளைத் தாக்கி அழிப்பது வழக்கமாகிவிட்டது. இதுவரை தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர், அரசியல் சாசனப்படியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், செப்டம்பர் 20 வரை, 12000 கன அடி நீர் தினமும் திறந்து விடப்படும் என்று கூறப்படுகிறது. அது தினமும் எவ்வளவு வருகிறது என்பதைப் பற்றிய செய்தி இல்லை. ஆனால், இந்த பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி டாக்டர் அப்துல் கலாம், தமிழக, கர்நாடக, ஆந்திர, கேரளா அரசுகளிடம் விவாதித்திருக்கிறார். அவர்களது சட்டமன்றங்களிலும் விவாதித்திருக்கிறார். அவரது ஆலோசனையின்பேரில், பேராசிரியர் ஏ.சி.காமராஜுடன் இணைந்து நான்கு மாநிலங்களுக்கான தென்னக நீர்வழிச்சாலை திட்டத்தை வடிவமைத்தோம். 

அதன்படி, கடல்மட்டத்தில் இருந்து பொதுவாக 250 மீட்டர் உயரத்தில் நான்கு மாநில அணைகளையும் மழைப்பிடிப்பு பகுதிகளையும் இணைத்து, நீர் வழிச்சாலைகளை உருவாக்கினால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ,50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என திட்ட அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறோம். இந்த ஆய்வு அறிக்கை குறித்து, பிரதமர் மோடிக்கும் நான்கு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். தென்னக நீர்வழிச்சாலை வந்தால் இந்த நான்கு மாநிலத்திலும் வெள்ளத்தால் கடலில் கலக்கும் 3000 டி.எம்.சி தண்ணீரை, எவ்வித பிரச்சினையில்லாமல் பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த அந்த மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட அணைக்கட்டுகளில் தேக்கிக் கொள்ளும் நீரை தவிர்த்து, இந்த வெள்ளநீரை பகிர்ந்து கொள்ளலாம். அதையும் மீறி 10 முதல் 20 சதவீதம் மட்டுமே கடலில் கலக்கும். இது ஒன்றுதான் பிரச்னைக்குத் தீர்வைத் தரும். இதற்கான சாத்தியக் கூறுகளை நான்கு மாநில முதல்வர்களும் ஆராய வேண்டும். இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கினால், ஐந்து முதல் 7 ஆண்டுகளுக்குள் தென்னக நீர்வழிச்சாலை பயன்பாட்டிற்கு வரும். தேவையில்லாமல், மக்களை மோத விட்டு, வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால், இது ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படும். நமக்குத் தேவை தென்னக நீர்வழிச் சாலையா? மீண்டும் கற்காலமா என்பதை அரசுகளே தீர்மானித்துக் கொள்ளட்டும்" என்றார் உறுதியான குரலில். 

Sunday, September 11, 2016

உலக இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு

லக இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு’ அமெரிக்காவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழன் பிரசன்னா. ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கிய அந்த மாநாடு, ஆகஸ்டு 30-ம் தேதி நிறைவடைந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக, அமெரிக்காவின் பல நகரங்கள், மகாணங்களில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்த பிரசன்னாவின் அனுபவங்களைக் கேட்டோம்.


உலக இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன?

‘உலக இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு’ 1906-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் நடக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில், அரசியல் தளத்தில் நம்பிக்கைக்கு உரியவகையில் செயல்படும் இளைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுகின்றனர். அமெரிக்க அரசாங்கமே இதற்கான தேர்வைச் செய்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள, அமெரிக்கத் தூதரங்கள் இந்தப் பணியைச் செய்கின்றன. அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகம் செயல்படும் முறை, நிர்வாக அமைப்பில் உள்ள படிநிலைகள் பற்றி விளக்குகின்றனர். இதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.
‘உலக இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்பவர்களை, அமெரிக்கா எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது?

’அரசியல் தளத்தில் இளைஞர்களாக உள்ளவர்களில், நம்பிக்கைக்குரியவகையில், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுபவர்களை அமெரிக்கா தேர்வு செய்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள, அமெரிக்கத் தூதரகங்கள், இதற்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்புகின்றனர். அப்படி மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து ஒருவரை வாஷிங்டன் தேர்ந்தெடுக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அனுப்பப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நான் தேர்வு செய்யப்பட்டேன். என்னைப்போல், இஸ்ரேல், பிரேசில், காங்கோ, மசிடோனியா, தைவான், மொராக்கோ, ஜப்பான், உகாண்டா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து இளம் அரசியல் தலைவர்கள்  வந்திருந்தனர்.’
மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவம் எப்படி இருந்தது? 

‘வெளிப்படையான அரசாங்கம்’ என்பதுதான் இந்த மாநாட்டில் எங்களுக்கான மையமாக இருந்தது. அதுபற்றிய விவாதங்கள், விளக்கங்கள், நடைமுறைச் சாத்தியங்கள் குறித்த பரிசீலனைகள், அமெரிக்காவில் அது எப்படி சாத்தியப்பட்டுள்ளது என்பதை ஒரு பருந்துப் பார்வையில் அறிந்து கொண்டோம். வெளிப்படையான அரசாங்கம், கணக்குசார் நிர்வாகம், நல்ல அரசியல் பண்புகள் என்பது ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.

இந்தியாவுக்கு டெல்லியைப்போல், அமெரிக்காவுக்கு  வாஷிங்டன். அமெரிக்காவின் மத்திய அரசு அங்கிருந்துதான் இயங்குகிறது. அதில், ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட்ஸ்’ என்று ஒரு துறையை  உருவாக்கி உள்ளனர். அந்தத் துறைதான், அமெரிக்காவின் மூளை. அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும் இங்குதான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அதைக்கூட அவர்கள் வெளிப்படையாக வைத்துள்ளனர். இதோடு, எஃப்.பி.ஐ, பாதுகாப்பு அமைச்சகம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றைப் பற்றியும் விளக்கினார்கள். அங்குள்ள தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொண்டோம். அரசாங்கம் வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதை அதன ஒவ்வொரு அடுக்கிலும், கவனமாக கண்காணிக்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நாடாளுமன்றம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு, இந்தக் கண்காணிப்பு நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில், காங்கிரஸ், செனட் என்று இரண்டு அவைகள் உள்ளன. ‘ஒரு பயனாளியும், அவருக்காக செயல்படும் அரசு அதிகாரியும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும்வகையில், நிர்வாக முறையை அமைத்துள்ளனர். ஏனென்றால், நேருக்குநேர் அந்த இருவரும் சந்திக்கும்போதுதான், ஊழலுக்கான வழி உருவாகிறது. அதனால், அதைத் தவிர்க்கிறார்கள். எல்லாவற்றையும் இ-மெயிலில் வைத்துக் கொள்கின்றனர். அரசாங்கத்தின் சார்பில், கொடுக்கப்படும் அந்த இ-மெயில் வசதி மிகத் துல்லியமாக செயல்படுகிறது.

அதுபோல, அங்கிருக்கும் செனட்டர்களைச் சந்தித்தோம். செனட்டில், கட்சி சார்புடைய குழுக்கள், இரு கட்சி சார்புடைய குழுக்கள், கட்சி சார்பற்ற குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. இதைப்போல, அரசு ஊழியர்களுக்கான எத்திக்ஸ் கமிட்டி ஒன்றும் செயல்படுகிறது. அவர்கள் அரசு ஊழியர்களுக்கான கடமை, அவர்களின் நேர்மை என்பதையெல்லாம் வரையறுக்கிறது. ஓ.ஏ.ஜி என்று அமைப்பு, நம்முடைய சி.ஏ.ஜி.யைப்போல இருக்கிறது. ஆனால், சி.ஏ.ஜியிடம் இல்லாத அளவிற்கு அதிகாரங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வெளிப்படையான அரசாங்கம் என்பது அமெரிக்காவில் எந்தளவிற்கு சாத்தியப்பட்டுள்ளது? 

'ஒருவர் ஒரு தகவல், ஒரு கோப்பு, நாடாளுமன்ற செனட் நடக்கும் வீடியோக்கள் என்று எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ஒருவர் நேரில் வந்து குறிப்பிட்ட ஆவணத்தைக் கேட்டு விண்ணப்பித்தால், 24 மணி நேரத்திற்குள் அதை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று விதி வைத்துள்ளனர். கொடுக்கவும் செய்கிறார்கள். இ-மெயில் மூலம் கேட்டால், 10 நாட்களுக்குள் கொடுக்கின்றனர். தபாலில் கேட்டால் ஒரு மாதத்திற்குள் கொடுக்கின்றனர். அந்தளவிற்கு வெளிப்படைத்தன்மையோடு அரசாங்கம் செயல்படுகிறது.

கலிபோர்னியாவில் அதை நேரடியாகக் கண்டோம். மாநில அரசின் செயல்பாடுகளைப்  பார்ப்பதற்காக அங்கு போய் இருந்தோம். அங்கு சட்டமன்ற நடவடிக்கைகள் எந்தளவிற்கு வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறது என்பதைப் பார்த்தபோது, தமிழகத்தில் இருந்து போன எனக்கு ஏக்கமாகவே இருந்தது.  அவையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் டிஜிட்டல் பெயர் பலகை வைத்துள்ளனர். அவையில் இருப்பவர்களின் பெயர்களை ‘கிரீன் லைட்’டில் போடுகிறார்கள். வேலை நிமித்தமாக வெளியில் போய் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை, ‘மஞ்சள் லைட்’டில் போடுகிறார்கள்.  விடுமுறையில் சென்றிருப்பவர்களின் பெயர்கள் ‘ரெட் லைட்’டில் காட்டப்படுகிறது. அதற்கு கீழ், அவர்கள் என்ன காரணத்திற்காக விடுமுறை என்பதையும் குறிப்பிடுகிறார்கள். சட்டசபை தொடங்கியதும், அது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதை நம்மால் பார்க்க முடியவில்லை என்றால், அதற்கான வீடியோ லிங்க் கேட்டு நாம் மெயில் அனுப்பினால் போதும். 24 மணி நேரத்திற்குள் முழு வீடியோவிற்கான இணைப்பை நமக்கு மெயில் அனுப்புகிறார்கள்.'


அமெரிக்க அரசியல்வாதிகளிடம் இருக்கும் குறை-நிறைகள் என்று என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

’அவதூறு பேச்சுகள், அவதூறு பார்வைகள் மிகக் கடுமையாக அவர்களிடம் இருக்கிறது. அங்குள்ள அரசியல்வாதிகளை ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும்போது, அவர்கள் நம்மூர் அரசியல்வாதிகளைவிட அதிகமாக வெறுப்பை உமிழ்கின்றனர்; அவதூறாகப் பேசுகின்றனர். இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஆனால், நேரம் தவறாமை, பொதுமக்களுக்கான மதிப்பை அவர்கள் கொடுப்பதில் நம்மூர் அரசியல்வாதிகளைவிட பல மடங்கு உயர்ந்து நிற்கின்றனர்.’
 

‘சாண்டில்யன்’ என்னும் சகாப்தம்!

‘‘மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ - இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான்’ சாண்டில்யன் தன்னுடைய, ‘போராட்டங்கள்’ நூலில் எழுதிய வரிகள்.
‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’’ என்கிற தன்னம்பிக்கையைக் கொண்டிருந்தவர் சாண்டில்யன்.
சினிமா, நாடகம், சங்கீதம் மீது காதல்!
அந்த மாபெரும் எழுத்தாளர், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரைச் சேர்ந்த சடகோபன் அய்யங்கார் - பூங்கோதைவல்லி தம்பதியருக்கு 1910, நவம்பர் 6-ம் தேதி மகனாய்ப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே தந்தையின் இலக்கிய ருசியால் வளர்க்கப்பட்டார். காலை எட்டு மணி வரை உறங்கப் பிரியப்பட்ட சாண்டில்யனை, விடியற்காலை ஐந்து மணிக்கே எழுப்பி முகுந்தமாலை சொல்ல வைத்துவிடுவாராம் அவரது தந்தை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம்பெற்ற அவர், அப்போதே தேச விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொண்டார். மூதறிஞர் ராஜாஜியின் தாக்கத்தால் அதில் ஒரு துரும்பாக அவரும் அடித்துச் செல்லப்பெற்றார். சினிமா, நாடகம், சங்கீதம் ஆகியவற்றின் மீது கல்லூரிக் காலத்திலிருந்தே காதல் கொண்டிருந்தார்.



‘‘சும்மா கதை எழுது தம்பி!’’
1932-ல் சென்னை தி.நகரில் குடியேறியது சாண்டில்யனின் குடும்பம். அங்கேதான் கல்கியும், சாமிநாத சர்மாவும் வசித்துவந்தனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாமிநாத சர்மா நடத்திய பஜனையில் கல்கியும், சாண்டில்யனும் கலந்துகொண்டனர். இதனால் அவர்களின் நட்புப் பாலம் விரிந்தது. இருவரும் சாண்டில்யனை கதை எழுதச் சொன்னார்கள். ஆனால் மறுத்துவிட்டார். ‘திராவிடன்’ பத்திரிகை ஆசிரியர் சுப்பிரமணியம், ‘‘சும்மா கதை எழுது தம்பி’’ என்று கட்டாயப்படுத்த, அதன் காரணமாகவே, அவருடைய ‘சாந்த சீலன்’ என்னும் முதல் சிறுகதை உதயமானது. அது, காங்கிரஸை ஆதரித்த கதை... அவருடைய தந்தைக்கும், அவருக்குமான கதை. ‘‘காங்கிரஸ் கதையை நமது பேப்பரில் எப்படிப் போடலாம்’’ என்று ‘திராவிடன்’ நிர்வாகிகள் கொந்தளித்தனர். இதனால் சுப்பிரமணியம் சிக்கலுக்குள்ளானார். ‘‘கதைதான் நன்றாக எழுதுகிறாயே... இன்னும் எழுதேன்’’ என்று கல்கியும், சாமிநாத சர்மாவும் சொல்ல... ‘கண்ணம்மாவின் காதல்’, அதிர்ஷ்டம்’ ஆகிய கதைகள் ‘ஆனந்த விகடனி’ல் பிரசுரமாயின. அதன்பிறகு ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் நிவாஸன், அவரைப் பத்திரிகையாளராக்கினார். உயர் நீதிமன்ற வழக்குச் சம்பந்தமான செய்திகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் மட்டுமே வந்துகொண்டிருந்தன. அதை மாற்றி, தமிழ்ப் பத்திரிகைகளில் இடம்பெற புத்துயிர் ஊட்டினார். அந்தக் காலத்தில் தள்ளாட்டத்தில் இருந்த தமிழ்மொழியைத் தலைநிமிரச் செய்தார்.
‘சினிமா பார்ப்பது கெடுதலா?’
‘பலாத்காரம்’ என்கிற தமிழகத்தின் முதல் அரசியல் நாவலை எழுதினார். அந்த நூலுக்கு, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி முன்னுரை எழுதியிருந்தார். இந்த நாவலுக்குப் பிறகு அவருடைய மதிப்புக் கூடியது. பிற்காலத்தில், ‘புரட்சிப்பெண்’ என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது. பி.என்.ரெட்டியிடமும், சித்தூர் நாகையாவிடமும் சினிமாவில் திரைக்கதை எழுதும் கலையைக் கற்றுக்கொண்டு அதில் கால்பதித்தார். ‘அம்மா’, ‘தியாகய்யா’, ‘என் வீடு’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதினார். மீண்டும் ‘சுதேசமித்திரனி’ல் சேர்ந்து சரித்திரக் கதைகளை எழுத ஆரம்பித்தார். ‘அமுதசுரபி’ நிர்வாகத்தாரின் வற்புறுத்தலால், அந்த இதழுக்கு சரித்திரச் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அதே இதழில், ‘ஜீவபூமி’ என்கிற கதையையும் தொடராக எழுதினார். ‘ஜீவபூமி’ தொடருக்குப் பிறகு, ‘மலைவாசல்’ என்ற தொடரை எழுதினார். இந்தப் புதினத்துக்குக் கிடைத்த வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத ஆரம்பித்தார். ‘கன்னிமாடம்’, ‘கடல்புறா’ (மூன்று பாகங்கள்), ‘யவனராணி’ மூங்கில்கோட்டை’, ‘ராஜ பேரிகை’, ‘அவனி சுந்தரி’, ‘பல்லவ பீடம்’ முதலிய பிரமாண்டமான நாவல்களை எழுதினார். இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் ‘கடல்புறா’. இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான். 1948-ல், ‘‘பத்திரிகைத் தொழிலைத் தொழிற்சங்க ரீதியில் அமைக்க வேண்டும்’’ என்று குரல்கொடுத்தார். ‘‘பத்திரிகை ஊழியர்களுக்குத் தொழிற்சங்க அமைப்பு வேண்டும்’’ என்ற கருத்தை முதன்முதலில் இந்தியாவில் பதித்தவரும் இவர்தான். ‘தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை’த் தொடங்கினார். அது, ‘தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்’ என்ற பெயரில் பிரபலமடைந்தது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொன்னார். சினிமா பற்றி ராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து, ‘சினிமா பார்ப்பது கெடுதலா?’ என்ற கட்டுரையை 1952-இல் எழுதினார். 1987 வரை தன் எழுத்துப் பயணத்தில் முத்திரை பதித்த அவர், அதே ஆண்டில் மறைந்தார்.
''எல்லாவற்றுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு!''
ஒரு சமயம் கல்லூரிப் பெண்கள் சிலர் சாண்டில்யனைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது ஒரு மாணவி, ‘‘சில வேளைகளில் உங்கள் நாவல்களில் அதிகமாகக்கூட (செக்ஸியாக) எழுதிவிடுகிறீர்களே’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘‘எந்த இடத்தில் அதிகம் என்று சொல்ல முடியுமா” என்று வினவியிருக்கிறார். அதற்கு அந்த மாணவி, ‘‘அதெப்படி முடியும்? பல இடங்களில் இருக்கின்றன’’ எனச் சொல்ல... ‘‘எந்த இடத்திலும் இலக்கிய வரம்பை மீறி, பண்பாட்டு வரம்பை மீறி, எதுவும் இருக்காது. எல்லாவற்றுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு. இலக்கியத்துக்கும் அப்படித்தான்’’ என்று பதிலளித்திருக்கிறார்.
‘‘சாண்டில்யனுடைய ‘கடல் புறா’ நாவலைப் படித்தபிறகுதான், தான் நீண்ட கடல் பயணம் செய்ய விரும்பினேன்’’ என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார்.
''வாசகர்களை ஈர்க்கக்கூடியவை...''
சாண்டில்யன் வாசகர் ஒருவரிடம் பேசினோம். ‘‘நான் 10-ம் வகுப்பு படித்தபோது என் தந்தை எனக்குச் செலவு கொடுத்த பணத்தில் சாண்டில்யனின், ‘ராஜ பேரிகை’ நாவலை வாங்கிப் படித்தேன். அந்த அளவுக்கு அவருடைய நாவல்கள் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். இன்றும் நிறையப் பேர் சரித்திர நாவல்களை எழுதலாம். ஆனால் அவர் இறந்தபிறகும் சரித்திர நாவல்களுக்கு ஓர் அங்கீகாரம் இருக்கிறது என்றால் அது அவருக்கு மட்டும்தான். எத்தனை முறை மறுபதிப்பு செய்யப்பட்டாலும் அவருடைய நாவல்களுக்கு என்று தனிப்பட்ட வாசகர்கள் உண்டு. அவற்றை வெளியிடும் பதிப்பகத்தாருக்கும் ஒருபோதும் விற்பனை குறைவதில்லை. அவருடைய நாவல்கள் வாசகர்களை ஈர்க்கக்கூடியவை... பிரமிப்பானவை. உதாரணத்துக்குச் சொல்லப்போனால், ‘விஜய ராணி’யில் ஓர் இளவரசி குதிரையில் இறங்கும் காட்சியை இரண்டு அத்தியாயங்களுக்கு எழுதியிருப்பார். அதேபோல் அவருடைய இன்னொரு நாவலில் போர்க்காட்சியைத் திரையில் பார்க்கும்படியான அளவுக்கு தன் கண்முன்னே காட்டியிருப்பார். நம்மை ஆண்ட ராபர்ட் கிளைவ்வைகூட ஓர் எழுத்தாளனாய் அங்கீகரித்து நாவலை உருவாக்கியவர் சாண்டில்யன். இன்றும் சென்னை கன்னிமரா நூலகத்துக்குச் சென்று அவருடைய சில நூல்களைப் படிக்கத் தேடினால், அது குறிப்புதவிப் பகுதியில் மட்டுமே உள்ளது. நூலகத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அதை வாடகைக்குக் கொடுப்பதில்லை. அந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது’’ என்றார்.
‘‘எழுத்துக்கும் சாவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்காதீர்கள். நல்ல எழுத்து சாவதில்லையே தவிர, நல்ல மனிதன் செத்துப்போகிறான்’’ - ‘போராட்டங்கள்’ நூலில் அவர் எழுதிய வரிகள்.
அவருடைய எழுத்து, சாகவில்லை என்பதை நிரூபித்துவிட்டார்

Saturday, September 03, 2016

How Ancient Tamilians found the SEA route?


ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப்பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன.
இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக்
கொண்டனர்.
தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர்
கிழக்கில் இருந்து வந்த வேளாண்தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன்
அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந்தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான்.

Friday, June 24, 2016

சிந்துவெளி நாகரிகம்: 2


அந்த நாகரிகங்கள் திராவிட நாகரிகங்கள் தான் என அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் நிறுவி இருந்தாலும். இன்னும் அந்த நாகரிகம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.  குறிப்பாக அந்த நாகரிகம் எப்படி அழிந்தது என்பது குறித்த தகவல்கள்.  இன்னும் வரலாற்று ஆய்வாளர்கள் அந்த நாகரிகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள். அதற்கு சமீபத்திய சான்று ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வு முடிவுகள்.

தமிழகத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், இப்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், முதன்மை நிதிச் செயலாளராகவும் இருக்கிறார். இவர்  தனது 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்னும் ஆய்வு நூலில், ஹரப்பா, மொகஞ்சாதாரோவில் இருந்த  இடப்பெயர்கள் குறித்த ஒரு நெடிய ஆய்வை மேற்கொண்டு தமிழகத்திற்கும், சிந்துவெளிக்கும் உள்ள தொடர்பை நிறுவி உள்ளார். இப்போதும் சிந்துவெளி நாகரிகம் பரந்து விரிந்திருந்த பாகிஸ்தானிலும், அதன் அருகில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானிலும்

- கொற்கை, 
- பாண்டி, 
- கிள்ளி, 
- சேரலா, 
- தோன்றி, 
- குன்று, 
- ஆமூர் 

என்ற பெயர்களில் இடங்கள் உள்ளன என தம் ஆய்வில் எடுத்துரைக்கிறார். 

மொகஞ்தாரோ திரைப்படமும், கோலிவுட்டும்:

நாமும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழனின், பாரதி, காமராஜர் வரலாற்றை சினிமாவாக ஆக்கி இருக்கிறோம் என்கிறீர்களா...? ஆம்தான். ஆனால் அது அனைத்தும் கடந்த காலம். வரலாறு என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த காலத்திலும் நாம் என்ன செய்திருக்கிறோம்?.

நாம் நமது பெருமிதங்களை சினிமாவாக ஆக்க தவறுகிறோம். அதை இன்னொருவர் எடுக்கும் போது,   நம்மை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று நாம் குதிக்கிறோம், போராடுகிறோம். இது எத்தகைய நிலைப்பாடு...?  யூத மக்களின் வலியை உலகமறிய செய்தது சினிமாதான். எத்தனை எத்தனை படங்கள் வந்துவிட்டன. ஏன் நம்மிடமிருந்து அது போன்று படைப்புகள் வருவதில்லை.  இது நம் பிழைதானே...? 

தமிழ் சமூகம் வளமான வரலாறும், அபார கற்பனை திறனும் கொண்டது. அதற்கு எடுத்துக் காட்டு சங்க இலக்கியங்கள். படிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் உள்ள வர்ணனைகள் அனைத்தும் பிரமிக்கதக்கவை.
வணிக நோக்கில் பார்த்தாலும், நிச்சயம் நம் வரலாறு சுவாரஸ்யமானதுதான் என்பது அப்பாதுரையாரின் குமரிகண்டம் மற்றும் பெ. கோவிந்தசாமியின் சிந்துவெளியும் தமிழர் நாகரிகமும் போன்ற நூல்களை படித்தால் தெரியும்.
வரலாறு தெரியாத இனம் நிச்சயம் வீழ்ந்து போகும். நாம் நம் வரலாற்றை செல்லுலாய்டில் நேர்மையாக பதிவு செய்வோம். வெற்று பெருமைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். நம் உண்மையான பெருமிதங்களையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு சினிமா என்னும் வலிமையான ஊடகம் மூலம் கடத்துவோம். வரலாறு பேசுவது ஒன்றும் அரசியல் அல்ல, அதே நேரம் சினிமாவில் அரசியல் பேசுவதும் தவறு அல்ல.

சிந்துவெளி நாகரிகம்:

மிழர்களுக்கு எப்போதும் தம் வரலாறு குறித்த ஒரு பெருமிதம் இருக்கும். 'தாங்கள்தான் உலக நாகரிகங்களுக்கு எல்லாம் முன்னோடியானவர்கள். ஆதிக்குடி தமிழ்குடிதான்' என்று பெருமைபட்டுக் கொள்வார்கள். மேலும், 'நாங்கள்தான் உலகிற்கு நாகரிகத்தை போதித்தோம். உலகில் பிற இனங்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பே, தமிழன் நாவாய் கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்து இருந்தான்' என்பார்கள். ஆனால், அந்த வரலாற்றைப் பதிவு செய்வதில் எப்போதும் பின் தங்கி விடுவார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில், லகான் இயக்குநர் அஷுதோஷ் கெளரிக்கர் இயக்கத்தில் வரவிருக்கும் மொகஞ்சதாரோ திரைப்படம்.

சிந்துவெளி நாகரிகம்:
வரலாறு எப்போதும் பல சுவாரஸ்யமான தகவல்களை தன்னுள்ளே கொண்டது. பல வரலாற்றுச் செய்திகள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பிரமாண்டமானதாகவும், பிரமிப்பு தருவதாகவும் இருக்கும். அத்தகைய ஒரு வரலாறுதான் சிந்துவெளி நாகரிக வரலாறு. முதன்முதலில் சிந்துவெளிக் குறித்த தகவல்கள் வெளிவர துவங்கியது 1844 ம் ஆண்டுதான்.
பிரிட்டானிய ராணுவப் பணியை பாதியிலேயே முறித்துக் கொண்டு ஓடிவந்த சார்லஸ் மேசன் என்னும் ஜேம்ஸ் லூயி , பஞ்சாப், ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் ஆகியப் பகுதிகளில் சுற்றி, 'Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and the Punjab’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் ஹரப்பா நகரச் சிதிலங்கள் பற்றி விவரித்து இருந்தார். அப்பகுதி உள்ளூர் மக்களுடன் உரையாடி, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், மண்ணிற்கு அடியில் ஒரு நகரம் புதைந்து கிடக்கிறது என்று விவரித்திருந்தார். ஆனால் இது முதலில், படித்தவர்கள் மட்டுமே விவாதிக்கும் பொருளாக இருந்தது. சிந்துவெளி நாகரிகம் குறித்த பிரமாண்ட தகவல்கள் பொது சமூகத்திற்கு தெரியத் துவங்கியது, 1920 களில் தான். ஆம், சர் ஜான் ஹியூபர்ட் மார்ஷல் தலைமையில் 1921 ம் ஆண்டு, சிந்துப் பகுதியில் அகழ்வாராய்ச்சி துவங்கியது. ஹரப்பா, மொகஞ்சாதாரோ உள்ளிட்ட பிரம்மாண்ட நாகரிகம் குறித்த தகவல்கள் அப்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய துவங்கின.


பிரமாண்ட கட்டடங்கள், மூன்று அடுக்கு வீடுகள்,  நன்கு வடிவமைக்கப்பட்ட நகர கட்டமைப்பு, குளம், குளத்தின் அருகிலேயே உடைமாற்றுவதற்கு இடம் என ஹரப்பாவும், மொகஞ்சாதாரோவும் நாகரிகத்தில் செழித்து இருந்தன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.