Sunday, October 02, 2016

கீழடி அகழாய்வு மையம் - Samples of Tamilian's history

கீழடி கிராமம் (Keezhadi) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமம் ஆகும். மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.

முத்துமணிகள், பெண்களின் கொண்டைஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன.

வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.

இந்திய-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.








"கீழடியில் இப்போது என்னென்ன தகவல்கள் கண்டறியப்பட்டிருக்கிறது?"

"கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கிறது. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டு முன்பான தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு வழிக்கோளாக அமையும். இப்போது, இருக்கும் மதுரையில் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய எவ்விதத் தடயங்களும் இல்லை. ஆனால், கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைக்கின்றன. சங்க இலக்கியத்தின் படி மதுரை என்பது திருபுவனத்துக்கு நேர் மேற்கேயும் திருப்பரங்குன்றத்துக்கு கிழக்கேயும்தான் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் மதுரை வடகிழக்கில் இருக்கிறது. இலக்கியம் சொன்ன இடத்தில் கீழடிதான் இருக்கிறது."


"ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிக்கு இப்படியான முனைப்புகள் ஏன் எடுக்கப்படவில்லை?"
"இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் கூட தமிழகத்தில் இனக்குழு நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள்தான் இன்னும் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் முதன்முறையாக தமிழகத்தில் ஒரு சங்ககால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கூட புதையிடம்தான். ஆனால் கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் எல்லாம் இருந்த ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹராப்பா நாகரிகத்துக்கு இணையான தொல்லியல் களம் தென்னிந்தியாவில் இங்கு மட்டும்தான் இருக்கிறது."

No comments: