கவிப்பேரரசு வைரமுத்து. திரையிசைப் பாடல்களில் கதைக்களத்துக்கு மட்டுமல்லாமல், திரைக்கு வெளியே சமூகத்துக்கும் தன் வரிகள் மூலம் செய்தி சொல்லிக்கொண்டே இருக்கும் 62 வயது இளைஞர். தான் எழுதிய பாடல்களில், சில சுவாரஸ்யப் பகிர்வுகளை அங்கங்கே பகிர்ந்திருந்தார். அவற்றிலிருந்து சில;
* இவர் ஐஸ்வர்யா ராய்க்கு எழுதிய பாடல்களில் ஏதாவதொரு இலக்கணக்குறிப்பு வந்துவிடுகிறது. ஜீன்ஸ் படத்தில் இரட்டை கிளவி. ராவணன் படத்தின் ‘கள்வரே கள்வரே’வில் வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள். இதைப் பற்றி சொல்லும்போது ‘காதல் பாட்டில் இலக்கணக்குறிப்பு வைக்கிறபோது அது இளைஞர்களிடத்தில் எளிதாகச் சென்று சேர்வதாய் உணர்கிறேன். இலக்கணக்குறிப்புகளை ஆசியர்கள் சொல்லிக்கொடுத்தால் சுமை. ஐஸ்வர்யா ராய் சொல்லிக்கொடுத்தால் சுவை’ என்கிறார்.
* ‘ஓஹோஹோ கிக்கு ஏறுதே’ பாடலில் ‘ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமக்குமட்டும் இதுதான் ரஜினிச்சித்தர் பாட்டு’ என்றுதான் எழுதியிருந்தாராம். இயக்குநர், இசையமைப்பாளர் எல்லாரும் ஓகே சொல்லிவிட, வீட்டுக்கு வந்தவருக்கு ரஜினியிடமிருந்து அழைப்பு. ‘சித்தராவது அத்தனை சுலபமல்லவே.. ரஜினிச்சித்தர் என்பதெல்லாம் வேண்டாமே’ என்று அன்போடு கேட்டுக்கொள்ள ‘இதுதான் ஞானச்சித்தர் பாட்டு’ என்று மாற்றினாராம்.
* வைரமுத்து பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ‘அவன் ஆண் பால். அவள் பெண்பால்’ ஒரு மாணவன் குறும்பாகக் கேட்கிறான்.. ‘குழந்தை எந்தப் பாலில் அடங்கும்?’ ஆசிரியர் திகைக்க, வைரமுத்து பதில் சொன்னாராம்: ‘குழந்தை தாய்ப்பாலில் அடங்கும்’. மின்னலைப்பிடித்து பாடலில் அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்று வார்த்தை விவாதம் நடத்தியபோது இது ஞாபகம் வந்ததாம் கவிஞருக்கு
* சிங்கப்பூரில் நண்பரோடு நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ஒரு பெரியவர் வழிமறித்து, ‘நீங்கதானே வைரமுத்து? உங்களோட ஒரு பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று சொல்லி, ஒரு பாடலை வரிக்கு வரி பாராட்டிவிட்டுச் சென்றாராம். உடனிருந்த நண்பர் கொஞ்சம் மரியாதையாக விலகி நிற்கிறார். ‘யார் இந்தப் பெரியவர்’ என்று வைரமுத்து கேட்க ‘எஸ்.ஆர்.நாதன்’ என்கிறார் நண்பர். ‘என்ன செய்துகொண்டிருக்கிறார்?’ இவர் திரும்பக் கேட்க, நண்பர் சொல்கிறார். ‘சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருக்கிறார்’. அப்படி ஜனாதிபதி பாராட்டிய பாடல் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’
* சில பாடல்கள் கதைக்குப் பொருந்துவதைவிட, வாழ்க்கைக்கு பொருந்திப் போகிறது. முரளியின் படமொன்றில் கதைச்சூழலுக்கு வைரமுத்து எழுதிய பாடலொன்று, முரளியின் இறுதி ஊர்வலத்தின்போது ஒலிபரப்பப்பட்டு கண்ணீர்ச்சூழலுக்கும் பொருந்திப் போனது குறித்து வருந்தியிருக்கிறார் கவிஞர். அந்த வரிகள்: ‘ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழவேண்டாம் துளி கண்ணீரும் விடவேண்டாம்..’ அதேபோலவே பாடகி ஸ்வர்ணலதாவின் இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட பாடல் ‘போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு..’

* மனிதன் படத்தின் ‘மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்’ பாடல் நீளம் கருதி படத்தில் இடம்பெறாது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டு விட்டது. பிறகு படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினியின் காதில் இந்தப் பாடல் விழ, ‘நல்லாருக்கே’ என்று இயக்குநரிடம் பேசி டைட்டில் பாடலாக சேர்த்தினார்களாம்.
* தமிழில் ராவணனுக்கு வைரமுத்து எழுத, இந்தியில் ராவனுக்கு குல்சார் எழுதுகிறார். ‘என்னைவிட நிச்சயமாக வைரமுத்துதான் அருமையாக எழுதியிருக்கிறார்’ என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார் குல்சார். இதைக் கேட்ட வைரமுத்து சொன்னாராம்: ‘என்னைவிட நிச்சயம் குல்சார் திறமையான கவிஞர்தான். ஆனால் இந்தியைவிட நிச்சயமாக தமிழ்தான் சிறந்தமொழி என்பதால் என் எழுத்து விஞ்சி நிற்கிறது’
* கவிஞர் கிராமத்திலிருக்கும்போது பாரதிராஜா ‘உடனே பாடல் வேண்டும் என்று மெட்டனுப்புகிறார். எழுதிக் கொண்டிருக்கும் கவிஞருக்கு உள்ளூர் ஒலிபெருக்கியின் ஓசை தொந்தரவு கொடுக்கிறது. நண்பர்களை அழைத்து சொன்னபோது ஒலிபெருக்கி நின்று, பாட்டு பிறக்கிறது. 3 மாதம் கழித்து திரும்ப கவிஞர் கிராமத்துக்குப் போனபோது அதே ஒலிபெருக்கியில் அவர் அன்று எழுதிய பாட்டு ஒலித்துக் கொண்டிருந்ததாம். அந்தப் பாடல்: ‘திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா..’
* முதல்வன் படத்திற்காக,

‘ஓலைக்குடிசை.. ஒற்றை ஜன்னல்.. துண்டு மேகம்.. தூரத்து வானம்!
கொஞ்சம் வெற்றிலை.. நிறைய மல்லிகை.. கிழிந்தபாயில் கிளியோ பாட்ரா!’ -

என்று வரிகளை எழுதிக்கொடுத்துவிட்டார். பாடி, பாடலும் ரெடி. ஆனால் ஷங்கர் அழைத்து, ‘இவ்ளோ மென்மையான பாட்டு. அதும் க்ளைமாக்ஸ் முன்னால. ரசிகன் எழுந்துபோய்டுவான்’ என்று சொல்ல வேறு எழுதிக் கொடுத்தார். அதுதான்... ‘உப்புக்கருவாடு ஊறவெச்ச சோறு ஊட்டிவிட நீ வேணும் எனக்கு’
* வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-ஸில் ரசித்து ரசித்து கவிஞர் எழுதிய பாடல் ‘காடு திறந்தே கிடக்கிறது..’ இசையமைப்பாளர் பரத்வாஜும், இவரும் ‘இந்தப் பாடலை தேசமே கொண்டாடப்போகிறது’ என்று சிலாகித்துக் கொண்டிருக்க, பாடல்கள் வெளியாகி ஒரு குத்துப்பாடல் மற்ற எல்லாப் பாடல்களையும் அடித்துக் கொண்டு போனது. அது ‘சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா டோய்!’
* இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஒரு சூழல் சொல்லி, ‘இடைவேளைக்கு முன் கதாநாயகி, காதலியாக இருப்பாள். அப்போதும் பொருந்தவேண்டும். இடைவேளைக்குப் பின் அவளே விதவையாக இருப்பாள். தற்கும் பொருந்தவேண்டும்’ என்கிறார். அதற்கு எழுதிய பாடல்தான்; ‘வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே..’
* பாடலின் மெட்டுக்கு ‘மெல்லினமா, வல்லினமா எது பொருந்தும்?’ என்ற அறிவியலை அறிந்து அதற்குத் தகுந்தபடி தான் எழுதிக்கொடுப்பாராம் கவிஞர். அதனால்தான் ‘அன்புமிக்க மங்கையே.. ஆசையுள்ள தங்கமே இன்பமெல்லாம் அள்ளித்தாடி..’ என்று எழுதலாமா என்று யோசித்து, இந்த மெட்டு வல்லினத்தைத்தான் கேட்கிறது என்று விஞ்ஞான பூர்வமாக யோசித்து, ‘ஒட்டகத்தக் கட்டிக்கோ’ என்றெழுதினார்.
* கவிஞர் சின்னவயதில் கேட்ட நாட்டுப்பாடலில் வரும் ‘வாய்க்கா கரையோரம் வந்து நின்னான் அய்த்த மகன் வந்து நின்ன அய்த்தமகன் வாடபட்டுச் சூலானேன்’ வரிகளை ஞாபகப்படுத்திதான் அதன் நீட்சியாக ‘உசிலம்பட்டிப் பெண்குட்டி’ பாடலில் ‘நீ ஓரக்கண்ணால் பாத்தாலே நான் புள்ளத்தாச்சி’ என்று எழுதினாராம். காத்தடித்து கர்ப்பமானது அந்தப் பெண்.. கண்ணடித்தே கர்ப்பமானது இந்தப்பெண் என்பார் கவிஞர்.
* ஒருபாடல் ஒலிப்பதிவு முடிந்து வந்து ‘முழுப்பாடலையும் கேட்கமுடியுமா?’ என்று கேட்கிறார் எஸ்பிபி. உடன் ஜானகி. இசையமைப்பாளர் வித்யாசாகர் போட்டுக்காட்டியதும், அதே ஒலிப்பதிவுக்கூடத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்து, ‘ஆண்டுக்கு இப்படி ஒரு பாட்டு கிடைத்தால் போதும். வாழ்நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கலாம்’ என்று வித்யாசாகர், வைரமுத்து எல்லாரையும் கட்டிப்பிடித்துப் பாராட்டுகிறார். அந்தப் பாடல் ‘மலரே மௌனமா..’

No comments:
Post a Comment