"மனிதன் கடவுளைக் கண்டுபிடித்தபோது வரலாறு தோன்றியது. மனிதன் கடவுளாகும்போது அது முடிந்துவிடும்"- இது, பிரபல வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான 'நோவா ஹராரி'யின் புகழ்பெற்ற மேற்கோள்.
2014-ம் ஆண்டு ஹீப்ரூவில் வெளியான இந்தப் புத்தகம் பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பலரும் இந்த நூலைப் பரிந்துரைத்துள்ளனர். இந்தப் புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு
.
இந்தப் புத்தகம் மனிதர்களின் வரலாற்றைச் சுருக்கி 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து தொடங்குகிறது.
இந்த உலகத்தில் பல்வேறு மனித இனங்கள் இருந்தன. அதில் ஒன்றாக இருந்த `ஹோமோ சேபியன்ஸ்’ என்கிற நாம் மட்டும் எப்படி இன்றைக்கு எஞ்சி நிற்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தை ஆள்கிறோம்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் சாதாரண விலங்குகள்தான். நம்மை விட கொரில்லாக்களும் ,மின்மினிப்பூச்சிகளும், ஜெல்லி மீன்களும் நமது சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது உண்மை.
பன்றிகளில் பல வகை இருப்பதைப்போல, நாய்களில் பல வகை இருப்பதைப்போல, நாமும் பலவகையாக இருந்தோம்.
என மனிதர்கள் பல்வகையாகவும் பல்வகை குணங்களுடனும் இருந்தோம்.
அதில் ஒரு குழு, பெரும் உருவத்துடனும் அச்சமறியாத வேட்டைக்குழுவாகவும் இருக்க, மற்றவை குள்ளமான உருவத்துடன் திகழ்ந்தது என ஒவ்வொரு மனிதக்குழுவும் தனித்த அடையாளங்களுடன் இருந்தது. அதேபோல் `ஹோமோ சேபியன்ஸ்’-ஸைத் தவிர மற்ற மனிதக்குழுக்களும் முற்றாக அழியவில்லை.
அவற்றுள் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குச் சாட்சியாக இன்று ஐரோப்பிய பூர்விகக் குடிகளுள் நியாண்டர்தால் மனிதர்களின் ஜீன்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
மற்ற மனித இனத்துக்கும்தான் மூளை இருந்தது. இருந்தாலும் சேபியன்ஸ் மட்டும் உலகை வெற்றிகொண்டு ஆளும் ரகசியம் என்னவென்றால், அவர்களிடம் கூட்டணியாகச் செயல்படும் "அறிவாற்றல் புரட்சி" கண்ணுக்குத் தெரியாத இழையைப்போல் வேலை செய்தது. தொடர்ந்த அனுபவங்களின் அறிவுத்தொகுப்பாக அவர்களின் மூளை இருந்தது. அது பபூன்களைப்போல,ஓநாய்களைப்போலக் கூட்டாக செயல்படும் மூளை. ஆனால் அவை அதை ஒரு குழுவுக்குள் மட்டுமே செயல்படுத்தி நிறுத்திவிடும். ஆனால், `சேபியன்ஸ்’ அதைப் பல லட்சம் பேர்களை பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தன. உதாரணம்: "நாடு, மொழி, கடவுள், சட்டம், முதலாளித்துவம்,கம்யூனிசம் போன்றவை.
இப்படி பல்வேறு சுவையான செய்திகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தில்...
"மனித குல வரலாற்றில் மிகப்பெரிய மோசடி விவசாயப் புரட்சிதான்"
"இதுவரை நடந்த வரலாற்றுக் குற்றங்களில் மிகப்பெரியது நவீன நிறுவன வேளாண்மைதான்"
"நாம் ப்ரிட்ஜ் கொள்ளாத உணவுடன் வசதியான அபார்ட்மென்ட்களில் நிம்மதியாக இருந்தாலும், நமது ஜீன்கள் இப்போதும் நாம் சவன்னா காட்டில் உணவு தேடி அலைந்து கொண்டிருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறது" என அதிரடிக் கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.

- கிழக்கு ஆசியாவில் உருவான `ஹோமோ சேபியன்ஸ்’,
- ஐரோப்பியாவில் நமது உறவினர்களான `நியான்டர்தால்கள்’,
- ஆசியாவில் `ஹோமோ எரக்டஸ்’,
- கீழ்த்திசையில் ஜாவா தீவுகளில் ‛ஹோமோ ஸோலொனிஸிஸ்’