Sunday, January 29, 2017

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற மாமன்னர் ராஜேந்திரசோழர், கங்கைகொண்ட சோழபுரத்தில் நிர்மாணித்த கங்கைகொண்ட சோழீச்வரர் திருக்கோயில் மிக அற்புதமான சிவாலயம் ஆகும்.


கங்கை கொண்ட சோழபுரத்தில்  அன்னாபிஷேகம் விழாவால் அரியலூர் மாவட்டம் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் இடம்பெற்றுள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.   பதிமூன்றரை அடி உயரமும், அறுபது அடி சுற்றளவும்கொண்ட உலகப் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து காலை 11 மணிமுதல் பிரகதீஸ்வரர் லிங்கத்தின் மீது சாத்தப்படும்.

மாலை 6 மணியளவில் தீபாராதனை செய்யப்படும். இதன்மூலம் லிங்கத்தில் மேல் சாத்தப்பட்டுள்ள ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவதாகவும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவனை தரிசிக்கும் புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.